பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

273

அ - 2 - 5 - விருந்தோம்பல் 9



அ-2- இல்லறவியல்


அ-2-5 விருந்தோம்பல் - 9


அதிகார முன்னுரை:

‘விருந்தே தானும் புதுவது' என்றர் தொல்காப்பியர். (தொல் - பொருள் 237 புதியது, புதியவர், புதிய வரவு, புதிய உணவு வகை முதலிய அனைத்தையும் விருந்து என்னும் அடை கொடுத்துக் கழகக் காலத் தமிழர் வழங்கியுள்ளதைக் கழக நூல்கள் நெடுகலும் காணலாம்.

புதுவெள்ளம் வருவதை விருந்துபுனல் (பரி : 6-40) என்றும், அப் புதுப 'புனல் கடலில் புகுவதை வரும்புனல் விருந்து அயர்கடல்(பரி 10:29) என்றும் அற்றைப் புலவர்கள் கூறி மகிழ்ந்திருக்கின்றனர். விருந்திற் புன்கனோ உடையர் (புறம் : 46-7) என்பது, முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தை உடையவர்என்று பொருள் தரும் நறுந்தொடர்.

‘விருந்து' என்னும் சொல் மூன்று பொருள்களைக் குறித்ததாகிறது.

முதற்பொருள், புதியது என்பது. அதன் வழி, இரண்டாவது பொருள், தம் இல்லத்திற்கு வரும் புதியவர் என்பது. அதன் பொருள் வழிப் பிறந்த மூன்றாவது பொருள், புதியவராக வந்தவர்க்குப் படைக்கும், புதிய உணவு வகைகள் கொண்ட சிறப்புணவு என்பதைக்