பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

274


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 274 குறிக்கும். - இந்த மூன்று பொருள்களிலும் கழக இலக்கியங்கள் விருந்து என்னும் சொல்லைப் பரவலாகக் கையாண்டுள்ளன.

இங்கு விருந்தோம்பல் என்பது, தம் இல்லம் நாடி, அல்லது தம்மையோ, தம் இல்லத்துள்ளவர்களையோ தேடி வரும் புதியவர்களை ஒம்புதல் - பேணுதல் - என்று பொருள் பெறும்.

அவ்வாறு புதியவர்கள், தம் இல்லத்திற்கு வருகையில், என்றும் தாம் வழக்கம் போல் உண்ணும் உணவை அவர்க்குப் படைக்காமல், அவர்தம் பெருமையும் அருமையும் கருதி, தம் அன்பின் மிகுதியாலும், பண்பின் தகுதியாலும், அவர்க்குச் சிறப்புணவைச் செய்து படைத்தல், அற்றை இல்லக் கிழத்தியரின் இயல்பாக இருந்ததைக் கழக இலக்கியங்கள் நமக்குப் பல வகையாலும் உணர்த்துகின்றன. எனவே, புதியவர்களாகிய விருந்துக்குப் படைத்த சிறப்புணவும் விருந்து எனப்பெற்றதாகல் வேண்டும்.

இனி விருந்து என்னும் சொல் முதலில் புதியவர்களையே குறித்து, உறவினர்களைக் குறிக்காமலிருந்து, பின் அவர்களையும் குறித்ததை வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும் (புறம் : 42.17) என்னும் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. . -

இல்லறக் கிழத்தியின் மாண்புகளுள் ஒன்றாக விருந்து புறந்தரு தலை’ (விருந்து ஓம்புதலைத் தொல்காப்பியம் கூறுகிறது.

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும் மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின் விருந்துபுறத் தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் . - தொல்பொருள் 150-3. விருந்தோம்புதல் பண்டைக் காலத்துத் தமிழரிடையே பெரும் பண்பாகவும், பேரறமாகவும் இருந்தது. கழக இலக்கியங்களால் தெரியவருகிறது. அதுவும், அவ்வுணர்வு இல்லற மகளிடத்துப் பேருணர்வாக இருந்ததையும் உணர்தல் வேண்டும். விருந்து வருவதை மிகவும் விரும்பினர் அக்காலப் பெண்டிர். - - - - .

விருந்து விருப்புறுஉம் பெருந்தோட் குறுமகள்

நந்: 221.8 எமக்கே வருகதில் விருந்தே" - - -

நற். 120 10