பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279 அ 2 - 5 விருந்தோம்பல் - 9

இவ்வாறு முழுமையும் விருந்தோம்பா உணர்வு கொண்டவரன்றி, அரைகுறை மனவுணர்வுடன் ஓர் இல்லத்தில் விருந்து பரிமாறியதை உண்ணுதற்கு மனம் நொந்த அதே ஒளவையாரின் இன்னொரு பாடலும், பிற்கால இலக்கியத்து ஒர் எடுத்துக்காட்டாக நிற்கின்றது.

காணக்கண் கூகதே கையெடுக்க நானுதே மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வினுக்கென் என்பெல்லாம் பற்றி எரியுதே ஐயய்யோ அன்பிலாள் இட்ட அமுது.

- தனியன், அன்பில்லாமல் ஒருவர் அமுதே படைப்பினும் அது விருந்தோம்பியது ஆகாதென்க. இனி, அன்புள்ளவர்கள், எளிய கீரை உணவையே அன்புடன் பரிமாறியபொழுது, இதே ஒளவையார், மிக விரும்பி உண்டதை அவரின் இன்னொரு பாடல் பகர்கின்றது. -

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யாய் அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் கடகஞ் செறிந்தகை யார். . - - - - - தனியன் இவ்வாறு விருந்தோம்பல் தொடர்பான ஏராளமான செய்திகள் நம் பண்டைத்தமிழ் இலக்கியங்களுள், கால நெடுகலும், பதிந்து கிடக்கின்றன. பொதுவாக, விருந்தினரை இருவகையாகப் பிரிப்பர். தொடக்கத்தில் புதுவரே விருந்தினர் எனப் பெற்றனர். எனினும், நாளடைவில், பழகியரும் பழையரும் அடிக்கடி விருந்தினராக வருவதுண்டு இவ்வாறு புதியவர். பழையவர் எனும் இருநிலையினருமே விருந்தினர்தாம்.

விருந்தினரை எவ்வாறு ஓம்புதல் வேண்டும் என்பதற்கும் பண்டையில் முறை வகுத்திருந்தனர். அவரவர் தகுதிக்கும், நிலைக்கும், காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பவும், விருந்தினரின் தகைமைக்கும் பெருமைக்கும் ஒப்பவும், அவரவர்களின் ஒம்புதல் நிலை பலவாறாக இருக்குமேனும், பொதுவான

சீவக சிந்தாமணி 2828ஆம் பாடற்கு மேற்கோளாக நச்சினார்க்கினியர்