பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

282


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 282 புறவுலகத்தைத் தொட்டுப் பார்க்கிறான். விருந்தினனே பிறகு நண்பனாகின்றான்; துணையாகின்றான்; வழிகாட்டியாகின்றான்; ஆசிரியனாகின்றான். அறவோனாகின்றான்; தொண்டனாகின்றான்; தலைவனாகின்றான் என்க.

விருந்தோம்பலினின்றுதான், பொது உணர்வு கிளர்கிறது; நண்பு வளர்கிறது: மொழி பயிலப் பெறுகிறது; கருத்து ஊற்றெடுக்கிறது; இனம் உருவாகிறது; வீடு ஊராகிறது; ஊர் நாடாகிறது. அன்பு அருளாகி, அறமாகி, உலக உறவு தழைக்க ஊற்றம் பெறுகிறது.

உலக மருதத்தில், தமிழ் வயலில், முளையிட்டுத் தோன்றிச் செழித்து வளர்ந்த இப்பண்பாட்டுப் பயிரின் நறுவிளைவு நாகரிகமெனத் தலையெடுத்து நின்றது, அக்கால். அதன் பின்னர் தமிழகத்துப் புகுந்த ஆரியக்களையால், இப்பயிர் விளைச்சல் படிப்படியாய்க் குன்றத் தொடங்கியதைக் கண்டு மனம் நொந்த நூலாசிரியர், மாந்த நேயமும், அறமும் தழைக்க, இப்பண்பாட்டு உணர்வை மீண்டும் வலியுறுத்தும் முகத்தான், இவ்வதிகாரத்தை வரைந்து, தமிழின மேம்பாட்டிற்குப் பாயிரம் பாடினார் ö7ö芯

ஆரியவியல் கூறும் வடநூல்களுள் விருந்தினர் அதிதி எனப் பெறுவர். அதிதி என்பதற்குப் பரதேசி வேற்று நாட்டவன்) முன்பின் அறியாத புதியவன், ஏதிலி (அனாதை) எனப் பல பொருள்கள் உண்டு. அதிதிகள் ஓரிடத்தில், தங்கிச் சமைத்து உண்ணாமல் நாடோடிகளாகத் திரிபவர், 'அட்டுண்டு வாழ்வார்க்கு, அதிதிகள் எஞ்ஞான்றும், அட்டுண்ணா மாட்சியுடையவர்' - என்றும், அறநெறிச்சாரம் கூறுதல் காண்க. விருந்தோம்பலை அவர்கள் அதிதி கிரியை என்று கூறுவர். இதனை அவர்கள் ஈகை அறத்துள் தானதர்மத்துள்) வைத்துப் பேசுவர். பெரும்பாலும் அவர்கள் முனிவர், துறவியர், இருடி(ரிஷிகள், முதலியோரைப் பேணுவதையே விருந்தோம்பலாகக் கொள்ளுவர். நாள்தோறும் வாராது ஒரு காலத்து வருபவனுக்கே அதிதி என்று பெயர் என்பதாக மருநூல் கூறும். (மது li) இந்நடைமுறையும் அவர்களுக்கு மதவியல் சார்ந்ததே. மாந்தவியல் சார்ந்ததன்று. தமிழியலில்தான் இவ்விருந்தோம்பல் அறம் மிகுதியும் போற்றப் பெறுகிறது என்பதை உணர்தல் வேண்டும். * . ... . • ,

இஃது, இல்லற விளைவு ஆகலின், இல்லறவியலிலும், அன்புணர்வே இதற்குப் பாய்ச்சு நீராகவும், பயப்பு எருவாகவும் உதவ வேண்டுமாகலின், அன்புடைமை அதிகாரத்தின் பின்னும் வைக்கப் பெற்றது என்பது முன்னரே கூறப்பெற்றது, என்க. -