பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

284


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 284 வேளாண்மை மண்ணை ஆளுதல் தன்மை என்னை? - மண்ணை நன்செய் ஆக்கி, வித்திப் பயிர் செய்து அல்லது செய்வித்து, உலகோர்க்கு அளித்தல் தன்மை. -

பயிர் செய்பவர் வேள் + ஆள்பவர் - வேளாளர் (பொதுப் பெயர்) - காராளன் காரணப் பெயர், சிறப்புப் பெயர் (பயிர் செய்பவர் உடலால் வெயில் பட்டுக் கருத்திருப்பதால் என்க), - பயிர் செய்விப்பவர் - வேளாளர் - (பொதுப் பெயர்) - வெள்ளாளர் (சிறப்புப் பெயரும் காரணப் பெயரும்) (பிறரைக் கொண்டு பயிர் செய்வித்துத் தாம் நிழலிலிருப்பதால் உடல் சிவந்திருப்பவர்)

இனி, வேளாண்மை என்னும் சொல் மண்ணை (நிலத்தை உழுது ஆளும் தன்மைக்கும், விரும்பிப் பேணி உதவும் தன்மைக்கும் இணைத்துச் சொல்லப் பெறுவதால், உழவரது இயல்பாகவே வேளாண்மை என்னும் சொல் ஆளப்பெறலாயிற்று.

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் என்னும் பழமொழியைக் காண்க X

- இனி, வேளாண் மாந்தரியல்பாகக் கீழ்வரும் பத்துக் குணங்கள் நூல்களில் கூறப்பெறுகின்றன.

t அழிந்தோரை நிறுத்தல்-மனமும் உடலும் நலிவுற்றவரை, உரையாலும்

பொருளாலும் தேற்றி உயிர் வாழச் செய்தல், 2. ஆணை வழி நிற்றல் அரசுக் கட்டளைப்படியும், ஆன்றோர் மரபுப்

படியும் ஒழுகுதல், - 3. ஒக்கல் போற்றல் - சுற்றத்தாரைப் பேணுதல். செல்வர்க்கழகு

செழுங்கிளை தாங்குதல். வெற்றி வேற்கை :3) 4. ஒற்றுமை கோடல் - வேளாண் மக்களுடனும், பிறருடனும் இணைந்து

வாழ்தல், ஒவா முயற்சி - ஒழியாத முயற்சி. கசிவகத்துண்மை - துயருறுவார் மேல் கசிவு (கனி இரக்கம்கொண்டு உதவுந்தன்மை உடைமை. . 7 கைக் கடன் ஆற்றுதல் - ஈடு, உறுதி, பிணையல், அடகு முதலியவையின்றிப் பிறர்க்குத் தேவையான விடத்துப் பணம் கடனாகக் கொடுத்து உதவுதல். - r

8. திருந்திய ஒழுக்கம் கள்ளம் கவடற்ற நேர்மையான ஒழுக்கம்.