பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9 9. மண்ணிறை தருதல்-அரசுக்குத் தான் ஆளும் வேளாண்மை செய்யும்)

மண்ணுக்கு உரிய இறையை (வரியைத் தருதல்.

10. விருந்து புறந்தருதல் - தன்னை நாடிவந்த புதியவர்களையும்,

பழகியவர்களையும் பேணிப் புரந்து உதவுதல்.

6. செய்தல் அனைத்து நிலைகளிலும் உதவியாகச் செயற்படுதல்.

7. இல்லற வாழ்வை மேற்கொள்வதே பிறர்க்கு உதவுதல் பொருட்டே

என்று கருதுதல் உயர்ந்த பண்பாடும் மாந்த நேய மலர்ச்சியும் ஆகும் என்னும் கருத்தை வலியுறத்து வதாகும் இப்பாட்டு. - அவ்வாறு இல்லற வாழ்வின்றித் தனித்து வாழ்பவர் விருந்து ஒம்புதல் இயலாமையின், அஃது அவர்க்கு வலியுறுத்தம் ஆகாதென்க - உயிர்வாழ்தலின் பயனே தனக்கும், பிறர்க்கும் பயன்படுதல் பொருட்டே என்னும் உயிரியங்கியலின், உலகியங்கியலின முதல் அறத்தை இது வலியுறுத்தியது என்க. Ꭴ

அஉ. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா .

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82

பொருள் கோள் முறை :

சாவா மருந்து எனினும், விருந்து புறத்தது ஆக

தானுண்டல், வேண்டற் பாற்று அன்று. -

பொழிப்புரை : உயிரை உடலினின்று பிரிந்துவிடாமல் காத்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்ட மருந்தே எனினும், வந்த விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்க, தான் மட்டும் அதையுண்டல் விரும்பத்தக்கதன்று. (வெறுக்கத் தக்கது ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள் : * 1. சாவா மருந்து கடும் •. நோயினால் உயிர் உடலினின்று பிரிந்து விடாமல், காத்துக் கொள்ளும் அருமையும் சிறப்பும் வாய்ந்த மருந்து.