பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

அ- அறிவியல்-முன்னுரை


| 6 அ - அறவியல்-முன்னுரை இதன் உரையாகத்தோன்றாத நுட்பங்களெல்லாம் தோற்றிப் பலதுறைப் பட்டு விரிந்தநூலைச் செய்து முடித்தானாயினும், தன்னைத்தான் புகழ்தல் தகுதியன்றாமாதலின், நூல் செய்தானது புகழாகிய சிறப்புப் பாயிரத் தைப் பிறர் கூற வேண்டும், என்றவாறு கூறப்பெற்றுள்ளது.

இனி, இதற்கடுத்த நூற்பாவிலும்,

'தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் - மன்னிய அவையிடை வெல்லுறு பொழிதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும் புல வோர்க்கே

- நன்.53 இதில் வரும் புகழ்தலும் என்ற உம்மையான், இவ்விடங்களிலும் தன்னைப் புகழாமையே தகுதியென்பது பெற்றாம், என்று உரை விளக்கமும் இதற்குக் கூறப்பெற்றுள்ளது.

இவ்விரு வகையால் நோக்கினும், திருக்குறள் பாயிரம் நூலாசிரியரால் கூறப்பெறுவது கூடாதென்றே தடுக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையிலும் நூலாசிரியரே பாயிரம் கூறியிருப்பாரோ, அவ்வாறி ருப்பின் அது பாயிரமாக இருக்குமோ என்றெல்லாம் ஐயம் எழுகிறது. அவ்வாறு எழவே, - இது பாயிரமாக இருத்தல் இயலாது என்றோ, அவ்வாறு இருப்பின், இதை நூலாசிரியராகிய திருவள்ளுவரே கூறியிரார் என்றோ, முடிவு கொள்ள வேண்டியுள்ளது.

இனி, அது சிறப்புப் பாயிரம் ೯TTಾಗಿಹು, அதில் கூறப்பெற வேண்டிய கருத்துகள் இன்னின்ன என்றும் நன்னூல் கீழ்வருமாறு விளம்புகிறது.

ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே துதலிய பொருளே கேட்போர் பயனோடு ஆயென் பொருளும் வாய்ப்புக் கேட்டல் பாயிரத்து இயல்பே'

- நன்47 காலம் களனே காரணம் என்றுஇம் மூவரை ஏற்றி மொழிநரும் உளரே

- - நன்:48 அஃதாவது, ஆக்கியோன் பெயர், அந்நூல் வழிநூலா அல்லது முதல்நூலா என்பது, அந்நூல் வழங்குதற்குரிய இட எல்லை, அந்நூலின் பெயர், அஃது அமைந்துள்ள யாப்பு, அந்நூல் கூறுகிற பொருள், அதனைக்