பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

288


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 288 4. முகன் அமர்தல் - உள்ளத்தின் மகிழ்வுணர்வை முகத்தில்

தேக்குதல். முகத்தில் மகிழ்ச்சி தங்க. 5. நல் விருந்து - நல்ல தகுதியுடைய விருந்து தகுதியற்ற விருந்தைப்

பேணற்க என்றார்.

- நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவரவர் பண்பறிந்து ஆற்றாக் கடை (469 என்றார்.

6. நல்விருந்தால் நன்மையே விளையுமல்லது தீமை விளையாது என்று

அறவியல் (பொது வுணர்வியல் கூறினார்.

365- வித்து மிடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம். 85

பொருள் கோள் முறை :

விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் வித்து

மிடல் வேண்டும் கொல்லோ.

பொழிப்புரை தன் இல்லத்திற்கு வருகின்ற விருந்தினரைப் பேணி, அவர்க்கு உண்ணத் தந்தது போக, மிகுந்த உணவை உண்டு மகிழ்பவன் விளை

நிலத்தில் இட்ட விதைப்புக்குக் காவல் வலிமை வேண்டுமோ? வேண்டாவாம்)

சில விளக்கக் குறிப்புகள்:

i மிச்சில் : மிஞ்சு மீதி என்னும் சொற்பொருளடியாகப் பிறந்த சொல்.

மிஞ்சியது மிச்சில், அஃதவாது பயன்படுத்தாமல் மிகுந்தது. - இஃது, எச்சில் அன்று, அதனின் சொல்லாலும் பொருளாலும் வேறுபட்டது. . - இதுவும் எஞ்சு (மீதி) என்னும் சொற் பொருளடியாகப் பிறந்தது. . எஞ்சியது . எச்சில், அஃதாவது பயன்படுத்தி (உண்டு மிகுந்தது.

2. மிசைதல் - உண்ணுதல். நுகர்தல், (அநுபவித்தல்) என்னும் .