பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9

பொருளையும் இது தருதலால், மகிழ்வுடன் உண்ணுவதையும் இது

3. புலம் - நிலம் முதற் பொருள் அறிவு - அதன் பொருளடியாகப் பிறந்த இரண்டாவது பொருள் புலப்படுத்தல் வ்ெளிப்படுத்தல் (Expose) -தன்மையால் நிலம் புலம் ஆயிற்று அறிவும் அத்தகையதே. இனி, அறிவைத் தொடர்ந்து அறிவை வெளிப்படுத்தும் கருவியும் புலன் ஆயிற்று கட்புலன், செவிப் புலன் - என்றவாறு என்க. 'ம்' 'ன்' போலி. -

4. மிடல் - வலிமை; ஈண்டு இரண்டாம் படிநிலைப் பொருளாய்க் காவல் வலிமையைக் குறித்தது. தொல் ll - 5 - 3 -இல், இரண்டாம் படியாகவும் ஆகுபெயராகவும் வற்புறுத்தலைக் குறித்தது போல என்க. (தொல் 997) - - -

5. வித்து மிடல் வேண்டும் கொல்லோ:

விதைப்பித்த விதைக்குக் காவல் வலிமை வேண்டுமோ? வேண்டாவாம், என்க. - - -

விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்தின் வித்திய விதைக்கு வேலியிட்டும், ஆள் வைத்தும் செய்யப் பெறும் காவல் வலிமை வேண்டுமோ? வேண்டாவாம் - என்றார் என்க. - , , என்னை? - அவன் புலத்து விதைத்து விளைவாகி வருவன எல்லாம், பொது நலம் கருதி, அவனது இல்லம் நோக்கி வருவார், போவார் அனைவர்க்குமே, விருந்துக்கும் வேளாண்மைக்குமே பயன்படுத்தப் பெறுவன ஆகலின், அவன் விளைபுலத்துக்குக் காவல் வலிவு தேவையின்றி, ஊரார் அனைவருமே களவாடல் செய்யாமலும், அவ்வாறு செய்வார்க்கும், அப்புலத்தில் மேய வரும் கால்நடைகளுக்கும் காவலாகியும் நிற்பர் என்க. - இனி, இவ் வடிக்குப் பரிமேலழகர் முதல் பாவாணர் வரை உரையாசிரியர் அனைவருமே ஒன்றுக்குத்தலாகவும், ஒன்றடி மன்றடியாகவும், வித்தும் இடல் வேண்டுமோ என்றே சொற்பிரித்துப் பொருள் கண்டமை, உலகியலுக்கும், பகுத்தறிவியலுக்கும், அறிவியலுக்கும், ஏன், மெய்யறிவியலுக்கும்கூட, சிறிதும் பொருத்தமின்மையை உய்த்து உணர்க மதவியலில் தவிர, மெய்யறிவியலிலும் இறும்பூதுகள் (Miracles) இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் இல்லை என்க. வித்தாமல் விளைவது என்பது ஓர் இறும்பூதே. இது, மதவியல் சார்ந்த ஒரு சிலர்க்கேயன்றி, அனைவரின் நம்பிக்கைக்கும் பொருந்துவதன்று. இவ்வாறு ஒரு சிலர்க்கே பொருந்திய கருத்துகளை, அனைவர்க்குமே பொருந்திய அறநூல்களில் எடுத்துக் கூறுவது மெய்யறிவினார்க்கு இயல்பன்று. சொல்லாலும் பொருளாலும்