பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29] அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9

விளைவிக்க வந்து உதவும் தெய்வம் எது என்பதும் விளங்குமாறில்லை, என்க. இஃது, இன்னவாயினவாற்றால், பரிமேலழகரது தானே விளையும்' என்றவுரைக்கும், அவ்வுரைக்கு வடிவேலனாரின் தெய்வம் வித்திட்டு விளையச் செய்யும் என்னும் பரிந்துரைக்கும் பெருமையும் பெறுமதியும் இல்லை என்று விடுக்க -

இனி, திருவாசகக் கூற்றும் மதவியல் என்க. விருந்தோம்பல் மதவியல் சாராதது. மாந்தவியல் பொதுவுணர்வாகிய அறவியல் சார்ந்தது. அஃது ஏதோ ஒரு தனிப்பட்ட மதத்தின் நடப்பியலும் அன்று.

2. அடுத்து மணக்குடவரும் தானே விளையும் என்று வரிசை பற்றினார்.

3. அவ்வாறே பரிதியாரும், விருந்து உபசரித்து மிஞ்சினதைப் புசிப்பது, கழனிக்கு எருப் போட்டு, நீர்த் தேக்கினது போல, ஒன்று நூறாயிரம் விளையும், என்று கூறி, மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்று கரணிய கருமியமின்றிக் கற்பனை கூறினார்.

4. இனி, கவிராச பண்டிதர் என்னும் சமணமத உரையாசிரியர்,

தான புண்ணியத்தால் தேவர்கள் இரத்தின மழை பொழிகிறதும், போக பூமியில் பிறக்கிறதும், முதலானவை ஆம் என்றவாறு என்று கூறினார்.

இவர் விருந்தோம்பல் அறத்தைத் தானம் (ஈகை அறமாகக் குறித்தது

பொருந்தாது. அத்துடன் இவருரையும் மதவியல் சார்ந்ததென்று மறுக்க 5. திருக்குறளுக்குச் சுருக்கவுரை எழுதிய வ.உ.சிதம்பரனாரும்,

அவர் நிலத்தில் வித்து இடாமலே இறைவன் விளைபொருள்களை அருள்வன் என்றவாறு என்று பொருள் கூறி,

'வித்திடல் செய்யாமலே நெல் வரப் பெற்றமையை ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும், நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் காண்க என்றும், - ‘விச்சதின்றியே விளைவு செய்குவாய்' என்ற திருவாசகத்தையும் நோக்குக என்றும் விளக்கி, -

விருந்தினரை ஒம்புவானது நிலங்களைத் தேவர் விளைவிப்பர் என்று கருத்துக் கூறிமுடிப்பர். -இதில், இறைவன் அருள்வன் என்பது மத வழியினரின் பொது நம்பிக்கை அனைவர்க்குமே இறைவன் அருள்வது பொதுவான மதக்கோட்பாடாக இருக்க விருந்து பேணுவார்க்கு மட்டும் அவன் அருள்வன் என்னும் சிறப்புக் கவனிப்புக் கூறி, விரும்தோம்பலை வலியுறுத்துவது மருந்தவியலுக்கே இழுக்காம் என்க. மேலும் தெய்வநலன் கருதி விருந்தோம்பல்