பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9

- ஆனால், இவ் விளக்கங்களெல்லாம் வித்திட வேண்டுவதில்லை என்ற பொருளையே வலியுறுத்தி நிற்பன. இதுவே இயற்கைக்கு மாறான நிலை. கருத்து வேறுபாடே இங்குதான் என்பதால், இதற்குத்தான் விளக்கம் கூறப்பெறல் வேண்டும். பாவாணர் கூறும் (அ, ஆ, விளக்கங்கள் எப்பொழுதோ ஒரு காலத்து, எங்கோ ஒர் இடத்து நிகழ்ந்த அல்லது நிகழத்தக்க சிறப்பு நிகழ்வுகளாகவே இருப்பினும், அவ்வோரிரண்டே பொதுவான நிகழ்வாகவும், அறவுண்மையாகவும் ஆகிவிட முடியாது.

அடுத்து, அவர் கூறும் இ விளக்கத்துள்ள நிகழ்வு எப்பொழுதோ ஒரு முறைதான் நிகழ முடியும். நித்த நித்தம், அல்லது ஒவ்வொரு விதைப்புக் காலத்தும் நிகழ வியலாது. எனவே மூல முட்டுப்பாட்டிற்கு விளக்கமாக அமைய முடியாது. இது, கண்ணில் விழுந்த துரும்பை அகற்ற , காதைக் குடைந்தது போலும் ஒரு நொண்டிச் சாட்டே

இவை பொக்கானவை யாதலின் பொருந்தாதவையும் ஆகுமென அகற்றுக.

7. அடுத்து, விருந்தோம்புபவர் புதியவர்களைப் போற்றிக் காக்கும் போது, அவரால் கவரப்பட்ட மற்றவர்கள் அவருக்கு உறுதுணையாக நிற்பர் என்று கூறப் பெறும் ஒர் உரையும் பொருந்துமாறில்லை. என்னை? நிலம் வித்தப் பெற வேண்டுவதில்லை என்னும் கருத்திற்கு இஃது அரண்செய்ததாகாது. மற்றவர்கள் செய்யினும் வித்திடுதல் நிகழவே செய்யுமாகலின், குறள் கருத்துக் கொப்பிய நிழலுரை ஆகாதிது என்று இதனையும் தவிர்க்க

நிழலுரை - மூலமும் உரையும் பருந்தும் அதன் நிழலும் போல் இணைந்துவரல் வேண்டும் என்பர். அவ்வாறு பொருந்தியவுரை நிழலுரை என்க. 8. இனி, இன்னோர் உரைகாரர், விருந்தினரைப் பேணி, அவருண்ட பின் மீதமாகும் உணவை உண்பவன், தன் நிலத்திற்கு விதை போடுதலையும் விரும்பான். (விதைப்பதனினும் விருந்துக்கே முதன்மை தருவான்) - என்று பொழிப்புரை தருவர். -

இது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் போட்ட முடிச்சுப் போலாகும். ... . . . . . . . என்னை: விருந்து பேணுபவன் விதைக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக விருப்பின், விருந்தைப் பேணிவிட்டு விதைக்கவும், அல்லது விருந்தைத் தன் வீட்டிலுள்ளார் பேண, தான் போய் விதைப்புப் பணியைச்