பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

17


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 17

கேட்பதற்கு உரியவர், அதன் பயன், அது தோன்றிய காலம், அது தோன்றிய இடம், அது தோன்றுவதற்குரிய காரணம் ஆகிய பதினொரு விளக்கங்களும் அப்பாயிரத்துள் கூறப்பெறுதல் வேண்டும் என்பது இவ்விரு நூற்பாக்களிலும் கூறப்பெற்றுள்ளது.

இப்பதினொரு கருத்து விளக்கங்களிலும் ஒன்றுதானும், திருக்குறள் பாயிரத்துள் கூறப்பெறவில்லை என்பது வெளிப்படை யாகலின், திருக்கு றளில் கூறப்பெற்றுள்ள பாயிரவியலும், அதனுள் வரும், அறமுதல்' உணர்தல், பிறர் கூறும் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய நான்கு அதிகாரங்களும் திருக்குறளுக்கு இயைபானவையா இல்லையா என்றும் ஐயுற வேண்டியுள்ளது.

இயைபானவை என்றால், அவை பாயிரவியல் என்று பெயர் பெற்றி ருப்பது பொருந்தாது என்றே கருத வேண்டியுள்ளது. எனவே இதனை இடைச்செருகல் என்றே பிற்கால உரையாசிரியர் சிலர் கூறுவர். இது தொடர்பாகத் திருக்குறள் மரபுரை ஆசிரியராகிய பாவாணர், திருக்கு றட்குப் பாயிரந் தேவையில்லை யென்பதும் அஃது இடைச் செருகல்" என்பதும், ஆராய்ச்சியில்லார் கூற்றேயென அறிக' என்று முடிவு கூறுவர். மேற்படிநூல் - முன்னுரை பக்30)

இனி, ஒரு நூலுக்குப் பாயிரம் மிகவும் இன்றியமையாதது என்பதையும் நன்னூலார் கீழ் வருமாறு கூறுவார்.

ஆயிரம் முகத்தான் அகன்றது. ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே.

- நன்.54 மாடக்குச் சித்திரமும், மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க்கு அணியும்போல் நாடிமுன் ஐதுரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும் பெய்துரையா வைத்தார் பெரிது

- - - நன்.55 பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூலினது விளங்கும்

. - தனியன்

இனி, பாயிரம் என்பது வரலாறு