பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

296


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 296

யோசனை யோஜனா (சமசுக்கிருதம் - 4 முதல் 10 நாழிகையளவில் நடந்து செல்லும் ஒரு தொலைவு தூரம் ஒரு யோசனை. அஃதாவது 9 முதல் 13 கல் அளவு எனப்பெறுகிறது)

- இதையே ஸ்வர்க்கலோகம், மோrலோகம், தேவலோகம், இந்த்ரலோகம், அமரலோகம் என்றெல்லாம் வடமொழியிலும்,

துறக்கவுலகம், விண்ணுலகம், அமரருலகம், வானுலகம், தேவருலகம் . என்றெல்லாம் தமிழிலும் வண்ணித்துக் கூறுவர். அவையன்றி இந்நூலுள் வரும் தாமரைக் கண்ணான் உலகு (103 என்று கூறப் பெறுவதும் இதுவே. இவ்வாட்சி வேறு எந்தத் தமிழ் நூலிலும் இல்லை, என்க.

- இவ்வுலகம் அமராபதி என்றும் குறிக்கப் பெறும். - மற்றும், தேவருலகத்திற்கு இந்திரன் தலைவன் என்பர். அவன், வானவர்கோன், விண்ணவர்கோன் என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப் பெறுகிறான். - தேவர்கள் முப்பத்து மூன்று கோடிப் பேர் உள்ளனர் என்று எண்ணிக்கையும் சொல்லப்பெற்றுள்ளது. இவர்களது உணவு அமிர்தம் என்றும், இவர்கள் வாழும் சுவர்க்க உலகத்தின் சிறப்புகளும் பல்வகையாக உள்ளன என்றும் கூறப்பெற்றுள்ளன. - -இந்நிலவுலகத்தில், யாகங்கள் செய்வோர், புண்ணிய இடங்களுக்குச் சென்று வழிப்பட்டோர் (தீர்த்த யாத்திரர்), நோன்பு (விரதம்) இருந்தவர்கள், தானம் செய்தவர்கள் முதலியோரே, தேவருலகம் செல்வர்; அங்குள்ள தேவர்களால் வரவேற்கப்பெறுவர் என்றும் கூறப்பெறுகிறது. இதன் பொருட்டாகவே இங்கும் விருந்தினர்களை ஒம்பியவன் வானவர் விரும்பும் விருந்தினன் ஆவான் என்று சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளது போலும் -இஃதொரு சுவையான, கவர்ச்சியான, மதக் கற்பனையேயாகும். ஆனால் வழி வழியாக ஆரிய நூல்களிலும், தொன்மங்களிலும் (புராணங்களிலும், பழங்கதை இதிகாசங்களிலும் சொல்லப் பெற்றுத் திருவள்ளுவர் காலத்திற்குச் சற்று முன்பிருந்தே தமிழகத்திலும் பரவி வந்துள்ளது. -இக் கற்பனைக் கருத்துகளுக்கெல்லாம் எந்த அடிப்படையுமில்லை. அறிவியலுக்கும் மெய்யறிவியலுக்கும் பொருந்தாத, வெறும் மதவியலும், மனப் பிறழ்ச்சியும் கொண்ட வாழ்வியல், உலகியல் தாக்கங்களால் சோர்வுற்றவர்களின் உள்ளத்தில் ஒரு வகை நம்பிக்கையையும் பிடிப்பையும் ஏற்படுத்தி, அவர்களை மதவழியில்