பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

298


'திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 298 கருதி, அதன், நல்லுணர் வுண்மைகளை மட்டும் போற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்க. ஏனெனில், அவர் கூறும் அத்தகைய கருத்துகளில் மாந்தரை அடிமைப்படுத்தும் பாங்கு இல்லை என்க.

4. இனி, எல்லா விடங்களிலும் போலவே இங்கும் வானத்தவர்க்கு நல்விருந்து என்னும் தொடர்ப் பொருளில் உரையாசிரியர்கள் பெரிதும் ஒன்று பட்டும் சிற்சிறிது வேறுபட்டும், பலரும் பலவாறு கருத்தறிவிக்கின்றனர். அவற்றின் விளக்கங்கள் தேவையில்லை எனினும் அவ்வுரைக் கோணங்களை அறிதல் நன்றாம்.

பரிமேலழகர் தம் ஆரியவியல் வழக்கப்படியே, மறுபிறப்பில் தேவனாய் வானில் உள்ளவர்க்கு நல்விருந்தாம் என்பார். அவரை அடியொட்டியும் கருத்தொட்டியுமே பரிதி முதல் பாவாணர் வரை பொருள் கூறியிருக்கின்றனர்.

அவருள் இக்கால் உரை வெளியிட்ட ஓரிருவர் மட்டும், பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும், வானவர் என்பது ஒரு கருத்துச் சொல் அன்று என்றும், மிக மேலோரும் விரும்பும் நல்ல விருந்தாளியாவான் என்றும் பொருள் கூறிப் புலந்து செல்கின்றனர்.

எஃது எவ்வாறாயினும், இக்குறட்கு இங்குக் கூறப் பெற்ற விளக்கங்களே சாலுமென்க.

5. இது, கூடுதல் விருந்தால் மனமும் அறிவும் சோர்வடையாது தம்மால்

இயன்ற மட்டில் பொதுவறம் பேணுவது கூறியது என்க. O

அன. இணைத்துணைத்து) என்பதொன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். 87

பொருள் கோள் முறை :

வேள்விப் பயன் இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின் துணைத் துணை. . -. பொழிப்புரை விருந்து பேணுதல் என்னும் வேளாண்மையின் பயன்

இவ்வளவினது, இவ்வகையினது என்று கூறும்படி ஓர் அள்வோ மதிப்பீடோ இல்லை. பேணப்பெறும் விருந்தினரின் தன்மை, தகுதி ஆகிய அவற்றையும்