பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299 அ - 2 - 5 - விருந்தோம்பல் 9

அதே போல் அவர்க்குப் படைக்கப்பெறும் விருந்தின் தன்மையையும் சிறப்பையும் பொறுத்தது, அதனால் வரும் நன்மை.

சில விளக்கக் குறிப்புகள் :

i. இது விருந்தோம்புவதால், விருந்தோம்பியவர்க்கு வரும் நன்மை

கூறியது.

2. வேளாண்மையை வேள்வி என்று குறித்தார். இங்கு, இஃது, யாகத்தை

இணை கூறியதன்று.

வேளாண்மை விருந்து பேணுதாலகிய உதவி.

3 இனைத்துணைத்து : இன்ன அளவினது இன்ன வகையினது.

4. என்பது ஒன்று இல்லை - என்று கூறமாறு ஓர் அளவோ மதிப்பீடோ

இல்லை.

5, விருந்தின் துணைத்துணை : பேணப் பெறும் விருந்தினரின் தன்மை, தகுதி ஆகியவற்றையும், அதே போல் அவருக்குப் படைக்கப்பெறும் விருந்தின் தன்மையையும் சிறப்பையும் பொறுத்தது, அதனால் வரும் நன்மை. .

β. வேள்விப் பயன் : விருந்தோம்பிய வேளாண்மையின் நன்மை - பயன்.

Z

விருந்து பேணுவதால் விளைகிற நன்மை அல்லது பயன் என்று கூறுவது, ஒம்பப் பெறுகிற விருந்தினர் தம்மை ஒம்பிய வேளாளருக்குத் தம்மால் இயன்ற உதவியைப் பிற்காலத்துத் தேவையான விடத்துத் தேவையான அளவில் செய்யலாம் என்பதும், அவரது வேளாண்மை புணர்வையும் அறச் செயலையும் கேள்வியுற்ற பொதுநல வுணர்வுள்ள செல்வர், சான்றோர், அறவாணர் முதலியோர் அவர்க்குச் செய்யும் பாராட்டும், மதிப்பும் பெருமையும் பிற உதவிகளுமாம் என்க. 8. விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் என்னும் கருத்தை உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து - (105 என்னும் பாட்டானும் உறுதி செய்வர். 9. வேள்வி என்று கூறியதால் பரிமேலழகர் ஐம்பெரு வேள்வியின்

ஒன்றாகவின் வேள்வி என்றார் என மதுதர்மக் கூற்றை 11 ஆம் பிரிவு வலியுறுத்திக் கூறினார்.

மதுவில் அந்தப் பகுதியில் கூறப் பெற்றிருக்கும் பிற செய்திகளாவன: . - - -