பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

300


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 300

கிருகஸ்தன் யந்திரம் அல்லது முறம், அம்மி.துடைப்பம், உரல், உலக்கை தண்ணீர்க் குடம் என்னும் இவ் வைந்தினையும் பயன்படுத்திக் கொள்ளுவதால், அவனுக்கு ஐவகைக் கொலைப் பாவங்களும் உண்டாகின்றன.

'அவ் வைந்து பாவங்களையும் போக்குவதற்காக மகரிஷிகளால் நாள்தோறும் ஐந்து மகாயக்கியங்கள் வேள்விகள்) கிருகஸ்தனுக்குக் கிரமமாக விதிக்கப்பட்டிருக்கின்றன:

'அவ் வைந்து யக்கியங்களில் வேத ம்ோதுதல் பிரம்மயக்கியம், அன்னத்தினாலாவது ஜல தருப்பணத்தினாலாவது பிதிர்களைக் குறித்துத் திருப்தி செய்வது பிதிர்யக்கியம். தேவதைகளைக் குறித்து அக்னியில் ஒமம் செய்வது தேவயக்கியம். வாயச (காக்கை பலி முதலானவை வைப்பது பூதயக்கியம். அதிதிகளுக்கு உணவிடுவது மானுடயக்கியம். ஆக மகாயக்கியம்

'இவ் வைத்து மகாயக்கியங்களையும் தன் சக்திக்குத் தக்கபடி எவன் செய்கிறானோ அவன் கிருஹஸ்தா ஆஸ்ரமத்தில் இருந்த போதிலும், மேற்சொன்ன ஐந்து கொலைகளின் தோஷங்களையும் அடைவதில்லை: இதற்கொரு தனி வெண்பாவும் எடுத்துக் காட்டப் பெறுகிறது.

ஒண்பிரம மேவேதம் ஒதுதல்,ஒ மம்வளர்த்தல் எண்தெய்வம், ஈகுபலி யேயூதம் ஒண்டொடியிர் எண்ணிர்க் கடன்பிதி ரேவிருந் தோம்புதல் அண்ணிர்மை மானுடயா கம். இக் கருத்து மறுப்பாகப் பாவாணர் தம் மரபுரையில் கூறும் விளக்கம் ஈண்டு நினைக்கற் பாலது. அஃது இது :

"ஆரியர் தம் ஆரியக் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் பரப்புதற்கும், 'யாகம் என்னும் கொலை வேள்வியைத் தமிழரிடை எதிர்ப்பின்றிச் செய்ததற்கும், தம் கொலை வேள்விக்குக் கடவுள் வேள்வி என்றும், வேதக் கல்விக்குப் பிரம வேள்வியென்றும் பெயரிட்டு, அவற்றொடு பேய்ப் படையலாகிய பூதவேள்வியையும், விருந்தோம்பலாகிய மாந்த வேள்வியையும், இறந்த முன்னோர்க்குப் படைத்தலாகிய தென்புலத்தார் வேள்வியையும் சேர்த்து ஐவகை வேள்வியென்று தொகுத்துக் கூறி, வேள்வி என்று வருமிடமெல்லாம் ஆரிய வேள்வியை நினைக்குமாறு செய்து விட்டனர்."

O .