பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

சு 0.

அ - 2 - 5 விருந்தோம்பல் 9 மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 90

பொருள் கோள் முறை :

அனிச்சம் மோப்பக் குழையும்; விருந்து

முகம் திரிந்து நோக்கக் குழையும்.

பொழிப்புரை : அனிச்ச மலரானது மோந்தவுடன் வாடிவிடும் மென்மையுடையது. ஆனால், விருந்தினர் மனமோ அதனினும் மென்மையுடையதாக இருக்குமாதலால், தம் இல்லம் தேடி வரும் அவர்களை, முக மலர்ச்சி மாறுபட்டு நோக்கிய அளவிலேயே, அவர்கள் மனம் குழைந்து வாடிவிடுவர்.

சில விளக்கக் குறிப்புகள் :

1 .

2.

3.

மோத்தல் : மூக்கால் மோந்து பார்த்தல். குழைதல் : வாடுதல். அனிச்சம் : மிகவும் மென்மையான, ஒரு மரத்தினது பூ இதனை பூங்கணை, நாகமல்லி என்றும் அழைப்பர்.

- அனிச்ச மலர் முகர்ந்தால் வாடும் என்னும் செய்தி, கழக இலக்கியங்களுள் எங்கும் எவராலுமே சொல்லப் பெற வில்லை. அம் மலர் பற்றிய குறிப்பும் கலித்தொகை தவிர வேறு கழக இலக்கியங்களில் இல்லை. கலித்தொகையுள்ளும் ஒரே இடத்தில்தான் (91. வருகிறது.

-அனிச்சமலர் சூடிக்கொள்ளப்பெறுவது (15), மாலையிற் பெய்வது (கலி ; 91-1 என்று அறியப் பெறுகிறது. - - -நூலுள், இதன் வேறான மூன்று இடங்களில் 1, 15, 120 அனிச்சப் பூவை ஆசிரியர் குறிப்பிடுவதாலேயே அனிச்சம் பெருமைபெறுகிறது. இவர், இப் பூவைக் குறியாது விட்டிருப்பின், இதன் மென்மை பற்றி எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

- இவர், இது தவிர இப்பூவைப் பற்றிக் குறிப்பிடும் வேறு மூன்று இடங்களிலும் இதன் மென்மையையே புகழ்ந்து கூறியிருப்பதால், மலர்களிலேயே இதுதான் மிகவும் மென்மையுடையது, முகர்ந்தால் வாடும் தன்மையுடையது என்று தெரியவருகிறது.