பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

304


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 304

--இம் மூன்று இடங்களும் காமத்துப் பாலின், நலம் புனைந்து உரைத்தல் அதிகாரத்திலேயே வருவது குறிக்கத் தக்கது.

- மொத்தமாக இந் நூலுள் இப் பூ குறிப்பிடப் பெறும் நான்கு இடங்களிலும்,

பெண்ணுடம்பின் மென்மைக்கு ஓரிடத்திலும் (1. அவள் இடையின் மென்மைக்கு ஒரிடத்திலும் (115, அவள் அடியின் மென்மைக்கு ஒரிடத்திலும் (120,

இங்கு, விருந்தினரின் மன மென்மைக் குறிப்பிலும் ஆக மென்மைத் தன்மையைப் புலப்படுத்தவே ஆசிரியர் ஆண்டிருப்பது, அவரின், பொருள்களின்நுண்மையறியும் சிறந்த இயற்கை ஈடுபாட்டை உணர்த்துகிறது

என்க.

4. விருந்து குழையும் என்றது, அவர்களின் மனம் குழைந்து, முகம்

வாடுதலைக் குறித்தது. - முகர்தலால் குழைந்து வாடும் அனிச்சத்தைக் கூறி, முகந் திரிந்த பார்வையாலேயே வாடி விடும் விருந்தினர் மனத்தையும், முகத்தையும் இணைத்துக் கூறியதால், அம் மலரினும் மென்மை யுடையது அவர்களின் மனம் என்று குறிப்புணர்த்தினார் என்க. - அவர்களின் மனம் மென்மையானது, மற்றோர் இல்லம் தேடி வருதலால் இயல்பாக நேர்ந்த மெலிமையால் என்க.

5. இஃது, இவ் வதிகாரத்திற்கே முத்தாய்ப்பாக அமைந்து, விருந்தினரின்

தன்மையை இரு திறத்தார்க்கும் உணர்த்தியது என்க Ꭴ)