பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

306


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் - 30

இனியவை கூறல்' என்னும் தொடர் இரண்டு பொருள்களைக் கொண்டது.

ஒன்று, இனிமையான சொற்களைக் கூறுதல், இரண்டு, இனியவற்றைக் கூறுதல். - இவ் விரு பொருள்களையும் ஒன்றாக்கினால், இனிமையானவற்றை இனிமையான சொற்களால் கூறுதல் எனப் பொருள்பெறும்.

இனியவை என்பன நல்லவை. நன்மை பயப்பவை. இன்பம் தருபவை, をリ。

கூறுபவரும் கூறப் பெறுபவரும் எவராக இருப்பினும், அதுவே போல் கூறுபவை எவையாக இருப்பினும், அவை அன்பும் கனிவும் இனிமையும் கலந்த சொற்களால் கூறப்பெறுதல் வேண்டும் என்பது சிறந்த ஒர் உலகியல் நடைமுறை. நல்லனவாயினும் இனிய சொற்களால் கூறுவதையே பிறர் கேட்பர்.

இன் சொலால் அன்றி இருநீர், வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே நன்னெறி : 18 என்றார் பிறரும். -

இனிய சொல் அன்பு பொதி கிளவி (தொல் III, 159, அன்புறு கிளவி' (கலி - 138, 'அன்புடை நன்மொழி திருமுருகு 292 - என்றெல்லாம் சொல்லப் பெறுவதால், அன்புணர்வு கலந்திருந்தால் தான் கூறுகின்ற சொல், இனிமையாகவும், இனியவையாகவும் இருக்கும் என்பது உணரப்பெறுகின்றது. -

இனிய கூறுதலையும், இனிமையாகக் கூறுதலையும் கழக அறிஞர்கள் பலபடப் புகழ்ந்து கூறியிருக்கின்றனர். -

சிறந்த இசைஞன் இசைக்கின்ற செவ்வழி என்னும் நல்ல யாழிற் பிறந்த இசை போலும் இனிய சுவையிான சொற்கள்

நயவன் தைவரும் செவ்வழி நல்யாழ், இசைஒர்ந் தன்ன இன்தீம் கிளவி

- (அகம்: 2127)

'இன் தீம் கிளவி (கலி: 24-3) 'இன்சொல் பிணிப்ப - அகம் 153.) இன்சொல் மேவலைப் பட்டஎன் நெஞ்சு - நற்: 20-5)

- என்னும் கூற்றுகள், இனிய சொற்கள்தாம் உள்ளத்தை ஈர்க்கும், அவற்றைத்தான் உள்ளம் விரும்பும் என்னும் கருத்துகளை உணர்த்துவன.