பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3}} அ - 2 - 6 - இனியவை கூறல் - 0 பொழிப்புரை : குளிர்ச்சியான அன்புணர்வு கலந்து வெளிப்படும் குற்றம் விளைவிக்காத சொற்களே இன்சொல் என்பது, மெய்ப்பொருளை உணர்ந்து கண்டவர்களின் வாய்மை உரையாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

I. இது, மெய்ப்பொருள் அறிஞர் கூறும் இனிய சொல் என்பதற்கான

விளக்கமாகும்.

2. இன்சொல் ஆல் : இனிய சொல்லாவது ஆல் - ஆவது என்பது

எனும் சொற் பொருளுணர்த்திய அசை -

3. ஈரம் அளைஇ : குளிர்ச்சியான ೨||67|| ಆ.೧ುತು நீர்மையால்

குளிர்ச்சி வருவிக்கப்பெற்றது. நெஞ்சத்தின் ஈரம்,

நார் உடை நெஞ்சத்து ஈரம்' நற் : 233-7 'ஈரத்தின் இயன்ற நின் அருள் - கலி ; 10-18 "ஈரம் இலாத இவன் கலி : 84-8 ஈரமில் காதலர் - கவி 120-13 "ஈரமில் கேள்வன்’ - கவி : 144-61 "ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி - அகம் : 65-3 அறிவும் ஈரமும் பெருங்கண்ணோட்டமும் - புறம் : 20-6 "ஈரமிலாளர் தொடர்பு - நாலடி : 136

4. அளைஇ : கலந்து, 5. படிறு இலவாம் : உள்ளத்தின் குற்றமும், கருத்தின் குற்றமும் இல்லாதவனவாம் - உள்ளத்தின் குற்றம் - வஞ்சனை, சூழ்ச்சி, பொய், கள்ளம், கரவு, தன்னலம் முதலியன, கருத்தின் குற்றம் - தீயவை செய்யத் தூண்டும் கருத்துகள் . இதற்கு வஞ்சனை என்பது மட்டும் பொருளாகாது தீயவை செய்யும் குற்றத்தை அது குறியாது ஆகலான். 6. செம்பொருள் : உலகப் பொருள்கள், செயல்கள் ஆகியவற்றின்

உண்மைத் தன்மை; மெய்ப்பொருள்.

‘எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (355 "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (4.23)

என்றதும் காண்க.