பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

312


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 312

சிறப்பென்னும் செம்பொருள் 358) என்றும் கூறுவார். இதனை 'அறம் எனல் நேர்ப்பொருளாகாது.

7. கண்டார் : அறிந்தவர் - காணுதல் அறிதல். 8. வாய்ச்சொல் : வாயின் சொற்கள். இங்கு வாய்மைக்கு வந்தது, தீயவை

பயிலாத வாயாகவின். என்னை? ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் (139) என்றார் அவரும். 9. இக்குறளுக்குப் பரிமேலழகர் முதல் பாவாணர் ஈறாக, அனைத்து உரையாசிரியர்களும், இன்சொல் ஆவன, அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயின் சொற்கள் என்றே பொருள் கூறினர். அது பொருந்தா தென்க. என்னை? இனிய சொற்களைக் கூறுவது, செம்பொருள் கண்டார்க்கே மட்டும் உரியது, இயல்வது எனின், இது பொதுவார் அனைவர்க்கும் உரிய அறமாவது எங்கன்? செம்பொருள் கண்டார் வாய்ச்சொற்கள் இனியவை என்பதில் தவறின்று; பொருந்துவதே ஆயின், அதனால் மற்றவர்க்கு என்ன பயன்? பிறரும் அதைப் பேசவேண்டும் என்பதே ஆசிரியர் குறிக்கோளாதலின், அனைவர்க்கும் பொதுவான அறத்தை மெய்ப்பொருள் கண்ட சான்றோர்க்கு மட்டும் உடைமையாக்குதல் இலக்கணம் ஆகுமேயன்றி இலக்கியம் ஆகாதென்க . .

செம்பொருள் கண்டார்தாம் குற்றமற்ற அன்புடைய இனிய சொற்கள் கூறுமுடியும் என்றால், அஃது எவ்வாறு பொது அறம் ஆகும்? அதனை எவ்வாறு பொதுவார்க்கும் வற்புறுத்த முடியும்? அவ்வாறாயின் பொது மக்கள் இனிய சொற்கள் கூறுதல் இயலாதா? அல்லது கூடாதா?

மக்கள் அறத்தை அறிஞர் கடைப்பிடியாக மட்டும் எடுத்துரைப்பது தவறு; குற்றம்; பொருத்தமற்றது - என்க.

எனவே, அக்கருத்தைச் செம்பொருள் கண்ட மெய்யறிவுச் சான்றோர்மேல் ஏற்றிக் கூறாமல், சான்றோர் கூற்றாகக் கொள்வதே பொருத்தம் என்க. என்னை: அஃது அவராலேயே உணர்த்துவதற்கு இயலும் ஆகலின். .

10. இஃது, இனியவை என்பன இவை என்னும் சான்றோர்

மெய்க்கருத்தைப் புலப்படுத்தியது. O