பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

314


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 314

5, foil; முகத்தான் அமர்ந்து)இனிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனதே அறம். 93

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை : (தன் இல்லம் தேடி வந்தவரை இன்முகம் காட்டி வரவேற்று அவர் முகமும் தன் முகமும் நேருக்கு நேர் அமைய, (அவரை அமர்வித்துத் தானும்) அமர்ந்து, இனிய பார்வையால் அவரை நோக்கி, அவருடன் அகத்தினின்று வெளிவரும் (அன்புணர்வு தோய்ந்த இனிய சொற்களால் உரையாடுவதே சிறந்த பொதுநலவுணர்வாகிய அறம் ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

I. விருந்தினரைப் பேணும் இனிய நடைமுறை படிப்படியாக இதில்

விளக்கப்பெறுகிறது.

2. முகத்தான் அமர்ந்து : முகம் பட நேருக்கு நேர் அமர்ந்து.

அமர்ந்து என்பதற்குப் பரிமேலழகரும் அவரைத் தொடர்ந்த பலரும் 'விரும்பி என்றே பொருள் கொண்டுள்ளனர். அஃது, அமைதல், இருத்தல், படிதல், அடங்குதல், பொருந்துதல், வாய்த்தல் ஆகிய பொருள்களைத் தாண்டிய இறுதிப் பொருளாம். அஃது அத்துணைச் சிறப்பன்று. மேலும் அறியக்கூடாத மன விருப்பத்தினும், அதைச் செயலாக்கிக் காட்டும் தன்மையே வந்தவரை மகிழச் செய்வதாம். எனவே இயல்பான இப்பொருளே சிறந்தது என்க.

3. இனிது நோக்கி : இனிய பார்வையால் நோக்கி,

- தமிழில் பார்ப்பதற்குப் பொதுவாக மூன்று சொற்கள் உள்ளன.

அவை, பார்த்தல், காணுதல், நோக்குதல். அவற்றுள், - பார்த்தல் - காட்சியளவையான் மனமும் அறிவும் ஈடுபடாமல்

மேலோட்டமாகப் பார்ப்பது.

'நான் அவரைப் பார்த்தது இல்லை (வழக்கு) 'வருவிருந்து பார்த்திருப்பான் 6ே) 'அறம் பார்க்கும் (30)

'காலம் பார்த்து (487)