பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

19


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 19

இதேபோல், மேற்குறித்த நத்தத்தனார் பாடலையும் பொருள் கோள் முறையில்,

'பாயிரத்தினோடு ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பகர்ந் ததற்பின் என்று கொள்ளின், அதில் உள்ள சிக்கலும் தீர்ந்துவிடுவதை உணரலாகும். ஆனால் இவ்விரு பாடல்களும் இவற்றுடன் 25-ஆம் பாடலும் திருக்குறளுக்குப் பாயிரவியல் ஒன்றிருப்பதையே புலப்படுத் துகின்றன.

இனி, மூன்றாவதாக, தொடித்தலை விழுத்தாண்டினாரின் 22-ஆம் பாடலில்,

'அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று' என்னும் முதலடியில் வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும்.

இதுவும் எண்ணுச் சிக்கல் ஆகும். அஃதாவது, 'அறத்துப்பால் நான்கு இயல், பொருட்பால் ஏழு ஒன்று இயல்களும், காமத்துப்பால் 3 இயல்களும் என்று இப்பாடலில் இயல்கள் 4+8 (அஃதாவது 7+1) +3=15 இயல்களுமாகக் கூறப்பெற்றுள்ளதும் ஒருவகைக் குழப்பமே. அஃதாவது, காமத்துப்பாலை, ஆண்பால் கூற்றியல், பெண்பால் கூற்றியல், இருபால் கூற்றியல் எனப் பிரித்துக் கூறுவர். இக்கால், பரிமேலழகர் இயல் பகுப்பு முறைப்படி உள்ளவை மொத்தம் 13 இயல்களே!

இப்பாடலை, நான்கு இயல்கள் கொண்ட அறம் ஒரு பகுதி, பொருட் பால் ஒரு பகுதி, காமத்துப்பால் ஒரு பகுதி, ஆக மூன்று பாற்பகு திகளாகப் பகுத்து, என்று பொருள் கொள்ள இக்குழப்பமும் நீங்கி விடுவதாகக் கருத இடமுண்டு.

இனி, திருவள்ளுவமாலைச் செய்யுள்களில் உள்ள பிற இயல், அதிகாரப் பகுப்புக் குழப்பங்கள், பொதுமுன்னுரையில் முன்னரே கூறப் பெற்றுள்ளதை ஆண்டு அறிக.

இனி, பாயிரம் என்னும் சொற்பொருளும் ஆயத்தக்கது என்க. இது தொடர்பாக, மொழியியல் பேரறிஞர் பாவாணர் தம் மரபுரையின் முன்னுரையில் பக்கம் 30 இல் கீழ்வருமாறு கூறியிருப்பது கருதத்தக்கது. -

"பாயிரம் என்னும் சொல், முதற்கண் போர்மறவர் போர்க்களத்தில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைக் குறித்து பின்பு நூல் முகவுரையைக் குறித்தது. -

1) பயிர்தல் ஊரி (ஊர்வன), விலங்கு, பறவைகள் ஒன்றையொன்று அழைத்தல்