பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325 அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

அணியல்ல, பின்னவை யுடைமையே பிறரைக் கவர்வனவாகலின் அணியாகும் என்றார் என்க.

5. மற்றுப் பிற அல்ல ; மற்றவை பிறவெல்லாம் அழகோ அணியோ

- அழகு இயற்கையும், அணி செயற்கையுமாம். - மற்று என்பதை முன்னவர் அனைவரும் அசையென்றார். அது மற்றவை. என்று விரித்துப் பொருள் கூறும் சொல்லாகலின் அசையன்று. பொருளிலாது இடம் நிரப்பும் அசைச் சொற்களை நுண்ணறிவுடைய, மெய்யறிவுடைய, சொல்லின் தொகையறிந்த சான்றோர் மிகுதியும் பயன்படுத்தார் என்பது முன்னரே (24) கூறப்பெற்றது.

6. இதுவும், முன்னைக் குறளுக்கு இணைவாக நின்று இன்சொற்

பயனைக் கூறியது. இதில் பிறர் மதிக்கும் இயல்பு தெரிவித்தார்

என்க. O

க ச அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை - - --

நாடி இனிய சொலின். - 96

பொருள் கோள் முறை :

நல்லவை நாடி இனிய சொலின் அல்லவை தேய அறம் பெருகும்.

பொழிப்புரை : (உலகப் பொதுவறத்திற்குப் பொருத்தமான நல்ல செயல்கள், கருத்துகள், சொற்கள் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டு, (அவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு இனிமையாக எடுத்துப் பலர்க்கும் கூறிவந்தால், (மக்களிடையே ஏற்கனவே படிப்படியாகத் தோய்ந்து நிற்கும் நல்லவை அல்லாத செயல்கள், கருத்துகள், சொற்கள் ஆகியவை சிற்சிறிதாகக் குறைந்து, பொது அறவுணர்வுகளும், செயல்களும் கருத்துகளும் பெருகிவரும்.

சில விளக்கக் குறிப்புகள் : I. நல்லவற்றை நாடுவதும், அவற்றை மக்களுக்கு அன்புணர்வுடன் இனிமையாக எடுத்துச் சொல்லுவதும், பெரும்பாலும்