பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

326


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 326

கற்றவர்களாலேயே இயலும் ஆகலின், அவர்களையே முன்னிருத்திக் கூறியதாகும் இது.

2. மனத்தால் நல்லவர்களும், அறிவால் வல்லவர்களும் ஆகியவர்கள், உலகப் பொது நலன்கள் கருதாமல், ஒதுங்கி நின்று, தாமுண்டு, தம் பாடுண்டு என்றிருப்பதால்தான், உலகின்கண் அல்லவை (தீயவை)

பெருகி, நல்லவை குறைந்து நிற்பதாக ஆசிரியர் கருதுவர். அவரது loorGoTāāsār (Social Psychological) Glassistilisró, go.

3. இது, பெரும்பாலும் இனியவை கூறுதலால் நிகழ வேண்டுவதாகலின் இங்குக் கூறப்பெற்றது. i

- மற்றபடி விருந்தோம்பலுக்கும், அல்லது தனிப்பட்ட இருவ்ர்க்கும் அல்லது ஒரு சிலர்க்குமே, இனியவை கூறுதலறம் பயன்பட்டுவிடாது, மக்கள் அனைவர்க்குமே பயன்படவேண்டும் எனும் பேரறவுணர்வால் கூறப்பெற்ற கருத்திது வென்க.

4. அல்லவை . நல்லவை அல்லாத செயல்கள், கருத்துகள், சொற்கள்

தீய நிகழ்வுகள்.

5. தேய : சிறிது சிறிதாகக் குறைய.

அறம் பெருகும் : பொது அறவுணர்வுகளும் செயல்களும் கருத்துகளும் பெருகிவரும். - - - -

7. நல்லவை நாடி : உலகப் பொதுவறத்திற்கு அஃதாவது பொது நலத்திற்குப் பொருந்திய நல்ல செயல்கள், கருத்துகள், சொற்கள் ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டு. நாடுதல் - தேடி நோக்கமாகக் கொள்ளுதல், அல்லது நோக்கமாகக் கொண்டு தேடுதல். - இதற்குப் பரிமேலழகர் பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து என்று பொருள் கூறுவர். இது, பிழையான கருத்தும் விளக்கமுமாகும். நல்லவை' என்பதற்கு நல்ல சொற்கள் என்று பொருள் தருவது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பதாகும். -இப் பொருளையே பாவாணர் வரை பிறரும் கூறுவது, அவ்வாலை நீவிக்கொடுப்பதைப் போன்றதே! - - -- ; : ... ." . . . - இவர்கள் இவ்வாறு மயங்கப் பொருள் கொண்டது, இனியவை கூறுதல் என்பதற்கு வெறும் சொல்லினிமையையே பொருளாகக் கொண்டதுவே கரணியம் என்க. . . . .