பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

328


'திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் . 328 கெடுதல் போல நல்வினைப் பயன் முன், தீவினைப் LIT கெடும்' என்றும், பலவாறாய் மயங்கியும், மதவுணர்வு சார்ந்தும், மக்களியல் அறியாதும், மனவியல் உணராதும் கூறியவை, ஆரியத்தால் கலங்கிய தமிழியல் மட்டுமறிந்து, தமிழரியலும் அவர்தம் மெய்யறிவியலும் உய்த்துணராக் குழப்பத்தால் என்க.

8. இனிய சொலின் : பிறர் மனங் கொள்ளுமாறு இனிமையான சொற்களில், இனியவற்றைக் கூறிவந்தால். -

- நன்மைகள் இனியவை எனினும் இனிமையாக அன்புணர்வு

தோன்றக் கனிவாகக் கூறப்பெற்றால்தான் அவற்றை மக்கள் செவி கொள்ளுவர்; அதனால் மனந்திருந்துவர் என்றார் என்க. 9. இதில், பொது அறவுணர்வுகளும்கூட இனிமையாகச் சொல்லப்

பெறுதல் வேண்டும் என்று மக்கள் மனவியல் கூறப்பெற்றது.

O

து எ. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

பொருள் கோள் முறை :

பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்,

நயன் ஈன்று நன்றி பயக்கும்.

பொழிப்புரை : தனக்கும் பிறர்க்கும் பயனை உருவாக்கித் தருகின்ற பண்பு -விலகாத இனிய சொல், ஞாயத்தை உண்டாக்கி, நல்ல விளைவுகளையே

பெற்றுத் தரும்.

சில விளக்கக் குறிப்புகள் :

i நயன் : நயம் - நாயம் - ஞாயம். இவ்வடிவந்தான் வடமொழியில் நியாயம் என்று திரிக்கப்பெற்று, நீதியைக் குறிக்கும். நீதி வடசொல்; ஞாயம் அல்லது நாயம் அல்லது நயம், நயன் ஆகிய வடிவங்கள் அனைத்தும் தூய தமிழே. -

2 ஈன்று : பிறப்பித்து, உருவாக்கித் தந்து, உண்டாக்கித் தந்து.

3. நன்றி நன்மை, நல்லது.