பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

330


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 33

பண்பின் விலகாத சொல் இனிமை கூறலைக் குறித்து

அதிகாரத்தொடு பொருந்தியது.

இதனால் தனக்கு உண்டாகும் நன்மை கூறினார்.

. Ꮕ

க. அ. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும். 98

பொருள் கோள் முறை இயல்பு

பொழிப்புரை : புன்மை, இழிவு. இகழ்ச்சி ஆகிய சிறுமையுணர்வுகள் தவிர்ந்த இனிமை தரும் சொற்கள், வாழ்வின் பிற்பகுதியிலும், வாழ்கின்ற இப்பொழுதும், மனத்தாலும் செயலாலும் இன்பம் தருவனவாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

f

சிறுமையுள் நீங்கிய இன்சொல் : சிறுமை உணர்வுகளாகிய புன்மை, இழிவு, இகழ்ச்சி ஆகியவை நீங்கிய இனிய சொற்கள்; புன்மையான சொற்கள் கீழ்த்தரமாகச் சொல்லும் தகவற்ற சொற்கள், இழிவான சொற்கள், பிறர் மறைவுகளைச் சுட்டித் தாழ்வை உண்டாக்குபவை; இகழ்ச்சியான சொற்கள், மற்றவர்கள் இகழ்வாக நினைக்கும்படி கூறும் சொற்கள் ஆகியவை சிறுமைச் சொற்களாம். - - நீங்கிய என்பது, தப்பித் தவறியேனும் பேச்சுக்கிடையில் வந்துவிடாமல் தவிர்ப்பது. - -

- அதனால் கூறியவை முழுவதும், பிறர்க்கு வருத்தத்தைத் தராமல் இன்பத்தையும் நன்மையையும் தரும்படியாக இருத்தல் வேண்டும் என்றார். - - முன்னைய குறளில பணபன தலைபபாயாச் சொல் என்றவர், இதில் சிறுமையுள் நீங்கிங் இன்சொல் என்றது, பண்பு நீங்காத சொற்களைப் பேசினாலும் ப்ோதாது. சிறுமையுணர்வுள்ள ஒரு சொல் தானும் வாராமல் பேசுதல் வேண்டும் என்று நுட்பமும் சிறப்பும் கூறியது.