பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331

அ - 2 - 6 - இனியவை கூறல் - 10

பண்பு நீங்காத சொல்லைப் பிறர் விளங்கிக் கொள்வதினும், அல்லது விளங்கிக்கொண்டவர்க்கு மகிழ்வூட்டுவதினும், சிறுமைச் சொற்கள்தாம் மிகுதியும் விளங்கிக் கொள்வனவும், பிறர்க்குத் துன்பத்தைத் தருவனவும் ஆகையால், இதை அதனினும் மேல்நின்று வலியுறுத்திச் சொன்னார். - - - இன்பம் தருவதினும் துன்பம் தராமல் இருப்பது சிறப்பு என்பது உணர்த்தப் பெற்றது. - பிறரைச் சிறுமைப்படுத்தாத சொற்களைப் பேசுபவர்கள், பிறரால் என்றும் மதிக்கத் தக்கவர்களாகவும், பிறரைச் சிறுமைப்படுத்தும் சொற்களைப் பேசுபவர்கள் பிறரால் என்றும் இகழத்தக்கவர்களாகவுமே இருப்பர் என்க. - - மறுமையும் இம்மையும் இன்பம் தரும் : வாழ்க்கையின் பிற் பகுதியிலும், இப்பொழுதும் இன்பம் தரும். - வாழ்வின் மறுபகுதியாகிய இறுதிக் காலத்தை முற்கூறியது, தொடர்ந்து அவர் கடைப்பிடித்து வரும் இனியவை கூறுதலை உள்ளடக்கியது. , , , , . - ஒருவரைப் பழகப் பழகவும், காலம் செல்லச் செல்லவுமே அறிந்து கொள்ள முடியுமாதலால், இடையில் கைநெகிழ்க்காமல், வாழ்வின் இறுதிவரை ஒருவர் கடைப்பிடித்துவரும் கோட்பாடுகளுக்கும் அறவுணர்வுகளுக்குமே, இறுதிக்காலத்து உலகம் மதிப்பளிக்கும் ஆகையால், வாழ்வின் மறுவாழ்வுப் பகுதியாகிய இறுதிக் காலத்தை, இப்பொழுது வாழ்வதினும் சிறப்பித்துச் சொன்னார் என்க. -இதைக் கருமம் செயவொருவன் கைதுவேன் என்னும் பெருமை என்று பிறிதோரிடத்தும் (102) வலியுறுத்துவார். -

- இம்மையும் என்று உறுதிப்படுத்தியது எதிர்காலத்தில் அஃதாவது இறுதிக் காலத்தில் என்று சோர்வடைய வேண்டா, நிகழ்காலத்தும் அதன் பயன்கிட்டும் என்றது. , . . . . . .

- சிறுமை நீங்கிய இன்சொல் வழங்குபவனை நிகழ்காலத்தும் அவன்

மகிழும்படி போற்றுவர்; நன்மைகள் செய்வர். இனி, எதிர்காலத்தும்

அவற்றினும் மேலாகவே போற்றுவர், சிறப்புச் செய்வர் என்றபடி.

- சிறுமை நீங்கிய இன்சொல் கூறுபவன், செயலிலும் சிறுமைச் செயல்களைச் செய்யாமல் பெரும்ைச் செயல்களையே செய்வான்

என்னும் இயல்பால், அவன் மதிக்கப்பெறுதலும் போற்றப்பெறுதலும்

உய்த்துணர்த்தினார் என்க.