பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

332


'திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 332 இவற்றால் அவன் இப்பொழுதும் இம்மையும், மறுமைப்பொழுதும் (மறுமையும் இன்பம் பெறுவது கூறப்பெற்றது. -

இம்மையும் மறுமையும் என்பதற்குப் பரிமேலழகர் உள்ளிட்ட பிறர் இயல்பாகவே இப்பிறவி, மறுபிறவி என்றே உரை கூறினர். இந்நூலுள். இம்மை என்னும் சொல் மூன்று இடங்களிலும் 98, 1042, 135), மறுமை என்னும் சொல் நான்கு இடங்களிலும் (98, 459, 904, 1042 குறிக்கப்பெற்றுள்ளன.

- இவ்வேழு இடங்களில், இரண்டில்தான் இம்மையும் மறுமையும் இணைந்தே வருகின்றன.

- மற்ற ஐந்து இடங்களில் ஒன்றில் (131) மட்டும் இம்மையோடு பிறப்பும் சேர்ந்து வருகிறது. எனவே, மற்ற ஆறு இடங்களிலும் வரும் இம்மை என்னும் சொல், பிறப்பைச் சுட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வாறு சுட்டும் என்றால், அங்கும் பிறப்பு என்னும் சொல் இணைக்கப் பெற்றிருத்தல் வேண்டும். இல்லெனில் 1351இலும் பிறப்பு என்னும் சொல் இணைக்கப் பெறாமல்

- ( எழு பிறப்பு (62 என்னும் சொல்லுக்குக் கூறப்பெற்ற விளக்க முறையே இதற்கும் பொருந்தும் என்க) -

எனவே, இம்மைப் பிறப்பு (1315 என்று குறிப்பிடப் பெறுவது வேறு, இம்மை (98, 459, 904, 1042) என்று குறிப்பிடப் பெறுவது வேறு - என்றுணர்ந்து கொள்க. இனி, இம்மை என்று குறிப்பிடப் பெறும் மற்ற இரண்டு 98, 1042) இடங்களிலும், அது பிறப்பைச் சுட்டும் பொருள் வருதற்கு இடமில்லை. இவ்விரண்டில் ஒன்று-இங்கு 98 வந்தது. இன்னொன்று நல்குரவு ஏழைமை) அதிகாரத்தின் வருவது. அங்கு வருவதற்குப் பரிமேலழகர், வறுமை ஒருவனுக்கு மறுபிறவி இன்பமும் இல்லாமல் செய்து விடும், என்று கூறி, ஈயாமையால் அஃதில்லாயிற்று, என்று விளக்கமும் கொடுப்பார். அவர் குறிப்பில் ஈகை அறம் ஒன்று தான் மறுமையின்பம் நல்கும் என்பது அவரின் வேதமதக் கொள்கைக்கே முரணானது. என்னை? இல்லற வாழ்க்கை நடத்துவதும் (49 மனத்துக்கண் மாசிலனாக இருப்பதும் (34) பொய்யாமை அறம் கடைப்பிடிப்பதும் (297 - அறங்களே என்று ஆசிரியர் குறிப்பிடுவது பயனின்றோ? அல்லது அவை ஏழைமைக்கு இயலாவோ? அவற்றைச் செல்வரும் ஏழையரும்கூடச் செய்யலாமே! அவையும் அறங்களாயின், ஏழையரால் செய்யப்பெறின், மறுமையின்பத்தை அவை தாராவோ? ஈகையறம் ஒன்று மட்டுத்தான் பரிமேலழகர் கருத்துப்படியான மறுமையின்பத்தைத் தர வல்லதோ: ஓர்மின். - -