பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 - அ 2 - 6 - இனியவை கூறல் - 0

வன்சொல் வழங்குவது எவன்கொல்.

பொழிப்புரை : தான் கூறும் இன்சொல்லால் பிறரும், பிறர் கூறும் இன்சொல்லால் தானும், மகிழ்தலைக் கண்டு உணர்ந்தவன், அதைத் தவிர்த்துக் கடுமையான சொற்களைப் பயன்படுத்துதல் ஏனோ?

சில விளக்கக் குறிப்புகள் :

1. இன்சொல் இனிமை தருவது இருபுறத்தும் நிகழ்வதாகலின் கேட்டது மட்டுமன்றிக் கிளத்துவதையும் உள்ளடக்கிக் கூறப்பெற்றது. பிறர் ஒரு சார்புப் பொருளையே கூறுவர். 2. வன்சொல் - வன்மையான சொற்கள். வன்மை கடுமை, தடித்த

தன்மை. -

3. வழங்குவது பயில்வது, பயன்படுத்துவது.

கொல் - வியப்புப் பொருள் குறிக்கும் அசைச் சொல். 5. இஃது, உலகியல் தெரிந்தும் அதையொட்டி நடவாமல், மாறுபட

நடத்தலைத் தவிர்க்கக் கூறியது. . - ©

க00. இனிய உளவாக இன்னாத கூறல்

. கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100

. பொருள் கோள் முறை இயல்பு

பொழிப்புரை : இனிமை பயக்கும் சொற்களும், கருத்துகளும் தனக்குத் தெரிந்திருக்க, அவற்றைத் தவிர்த்து, இனிமை பயவாத சொற்களையும் கருத்துகளையும் ஒருவன் கூறுவது, இனிய மணமும் சுவையும் பொருந்திய கனிகளும் மரத்திலிருக்க மணமும் சுவையும் கனிவும் இல்லாது, புளிப்பும் அல்லது கசப்பும் உள்ள காய்கள் மேல் ஆசை கொண்டு பறித்து உண்பதைப் போன்றது. . . . . . - X

ಕಿರು ಯೋಹಹಹ ಅಲೆ|56