பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

21


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 21

'எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின் கள்ளுடைக் கலத்தர் உள்ளுர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறுபே ராளர்'

புறம் 178.7-9 'நெடுமொழி பயிற்றித் தோன்றல் செல்லாது -

- புறம் 376.22 இவ்வாறு, நெடுமொழி, வஞ்சினமொழி என்பதும், அது போருக்கு அழைக்கும் அழைப்பாகும்-முகவுரையாகும் என்பதும், இங்குக் காட்டிய பல்வேறு எடுத்துக் காட்டுகளால் தெரியவரினும், அவ்வழைப்பு அல்லது முகவுரை போன்றதுதான் பாயிரம் என்னும் நூல்முகப்பும் என்பது முற்றிலும் பொருந்துமாறில்லை.

மேலும், அழைத்தல் என்று பொருள்படும் பயிர்தல் என்னும் சொல் லே, பயிரம்-பாயிரம் என்று முன் நீண்டு, முகவுரையைக் குறித்தது என்னும் சொல்லாய்வு வரலாறு தழுவியதாகவும் தெரியவில்லை. அது வரலாறு தழுவியதாக இருந்திருப்பின் பயிரம் என்னும் சொல்லாட்சி இலக்கியங்களுள் ஆளப் பெற்றிருக்கும். அவ்வாறு இச்சொல் எந்த நூலிலும் ஆட்சி பெறவே இல்லை. மேலும் பாயிரம் என்னும் சொல்லே கூட முன் கூறப்பெற்ற பழமொழி நானூறில் ஒரிடத்தில் மட்டும், அதுவும் போர் அழைப்புப் பொருளில்தான் வந்துள்ளது என்பதை நாம் கவனித்தல் வேண்டும். -

இவ்வாறு நன்னூலார்க்கு (கி.பி. 13-ஆம் நூற்றாண்டிற்கு முன், நூல் வழக்கேறாத ஒரு சொல்லால் திருவள்ளுவர் (கி.மு. 2-அல் 3-ஆம் நூற்றாண்டு தம் நூலுள் பாயிரவியல் என்றோர் இயல் வகுத்துப் பெயரிட்டிருப்பார் என்பது எவ்வாற்றானும் பொருந்தாத ஒரு கூற்றே என்பதில் ஐயமே இல்லை. . - - ஆனால் அவ்வையப்பாட்டின் அடிப்படையில், இற்றைப் பாயிரவி யலில் உள்ள முதல் நான்கு அதிகாரங்களும் திருக்குறளைச் சார்ந்தவை அல்ல என்றோ, அவற்றைத் திருவள்ளுவர் எழுதியிருத்தல் முடியாது என்றோ, அவை இடைச் செருகலாய் இருக்கலாம் என்றோ மதிப்பி டுவது அல்லது முடிவு செய்வது கொஞ்சமும் பொருத்தமாயில்லை.

எஃது எவ்வாறிருப்பினும், திருக்குறள் பாயிரவியலில் இடங் கொண் டுள்ள நான்கு அதிகாரங்களும் திருவள்ளுவரால் எழுதப் பெற்றிருக்கா என்பதை உறுதிப்படுத்திக் கூறுவதற்கு எந்த அடிப்படைக் காரணமும் காட்டவியலாது. ஏனெனில் அந்நான்கு அதிகாரங்களும் பாயிரவியலில்’ என்று அடக்கிக்கூறப் பெறுவதற்குப் பொருத்தமாயில்லை என்று கருதலாமே தவிர, அவை திருக்குறள் நூல் அமைப்பிற்கு ஒத்தனவாக இல்லை என்று கூறவியலாது.