பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

அ - 1 -1 - அறமுதல் உணர்தல் முன்னுரை


25 அ - 1 -1 - அறமுதல் உணர்தல் முன்னுரை

வேண்டி, அவ்வற முதலாம் இறைமையுணர்வுத் தேவையை இவ்வதிகாரத் தின்கண் கூறப் புகுந்தார். அதிகாரப் பெயர் மாற்றம் அறமுதல் உணர்தல்:

பிற உரையாசிரியர்கள் கொண்ட பாடங்களில் இவ்வதிகாரப் பெயர் 'கடவுள் வாழ்த்து முதலிய வேறு பெயர்களில் உள. கடவுள் என்னும் பெயர்க் குறிப்பு இவ்வதிகாரத்து மட்டுமன்றி, நூலுள் வேறு எங்குமே வராமையானும், இறைவன் வேறு, கடவுள் வேறு, தெய்வம் வேறு ஆகலானும், இறைவன் என்று இவ்வதிகாரத்துள் வந்த (5,10) ஈரிடங்களிலும்கூட, அறமுதலையே உணர்த்தியுள்ளார் ஆகலானும், இவ்வதிகாரப் பெயர் அறமுதல் உணர்தல் (அஃதாவது அறத்தின் முதலாக நின்றியங்கும் மூலமெய்ப் பொருளாகிய இறைமையை உணர்தல் என மாற்றப்பெற்றது. - ‘வாழ்த்து எனும் சொல்லும், பொருளும் பொருத்தம் இன்மையாலும் அச்சொல்லும் தவிர்க்கப்பெற்றதென்க. - . இறைவன், கடவுள், தெய்வம்:

இறைமை அல்லது இறைவன் தோற்றம் கொண்ட அனைத்துக்கும் மூலமாய், முதலாய் நிற்கும் முதற்பொருள் அல்லது மூல ஆற்றல் தனித்து நிற்கும் நிலை.

கடவுள் அம்மூலப்பொருள் உயிர்களுடன் கலந்து நிற்கும் நிலை. இறக்க(அவதார நிலையும் அது. -

தெய்வம்: உயிர்களுள் மேம்பாடுற்றுச் சிறந்த மீமிசை மாந்த உயிர்கள், உலகத்து வாழ்ந்து மறைந்து, மீண்டும் உடற்பிறவியற்று உயிரொளியாய் இயங்கும் நிலை. -

இம்மூன்று நிலைகளும் தொடக்கத்தே வேறு வேறு காலங்களில் கருத்துப் படிநிலையும், சொற் படிநிலையுமாகிய வளர்ச்சி பெற்றுப் பல்வேறு உணர்வு நிலைகளை உணர்த்தி, இக்கால் ஒன்றெனவும் மிகைப்படவும் மயங்கி வழங்குகின்றன. தெள்ளிதின் உணர்வதற்காக இங்கு வேறு பிரித்துச் சொல்லப்பெறுகிறது. இவற்றின் தோற்ற விரிவு விளக்க வரலாறெல்லாம் இதன் நிறைவுரையில் கூறப்பெறும்.

இந்நூலைப் பொறுத்த அளவில், கடவுள் என்னும் சொல் கையாளப் பெறவில்லை. ஆனால் திருவள்ளுவர் காலத்திற்கு முன்பிருந்தும், அவர் காலத்தும் அவர்க்குப் பின்னும் இச்சொல் நெடுகலும் வழங்கப் பெற்றுள்ளது. இச்சொல்லை அவர் ஏன் தவிர்த்தார் என்பது புலப்படவில்லை. அவர் காலத்தில் ஆரியச் சார்பான கடவுள் இறக்க(அவதார) நிலைக் கதைகளும் தமிழகத்துள் வழங்கியுள்ளம்ை