பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

27


27 அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

சார்ந்தனவே! தமிழ்த் தெய்வமான திருமால் வேறு; ஆரியக் கடவுளான விஷ்ணு வேறு. இரண்டையும் ஆரியர்கள் தமிழில் சமசுக்கிருதக் கலப்புபோல் மயக்கினர். இவ்வகையில் இக்கால், உள்ள, தென்னாட்டுக்கே உரித்தான, சிவனிய(சைவ)க் கொள்கையிலும், திருமாலிய(வைணவக் கொள்கையிலும், தமிழியலும் ஆரியவியலும், பிரித்துணராதவாறு, மயங்கியே கிடக்கின்றன. தமிழினின்று சமசுக்கிருதத்தைப் பிரித்தெடுப்பதுபோல், சிவனிய, மாலியக் கொள்கைகளிலிருந்து, சங்கர, விஷ்ணுக் கொள்கையைப் பிரித்து உணர்த்துவதும், பிரித்தறிவதும், பிரித்தெடுப்பதும், கடல் நீரில் கலந்த சாய்கடை நீரைப் பிரித்தெடுப்பது போல, மிக மிகக் கடினம் என்க.

இறைவனுக்குப் பெயரும் இல்லை; வடிவமும் இல்லை:

காளி, மாரி, முருகன், சிவன், திருமால், வாரணன் முதலியவை தமிழ்த் தெய்வங்கள் அல்லது கடவுள்கள். தமிழியலில் இறைவனுக்குப் பெயரும் இல்லை; வடிவமும் இல்லை. தொல்காப்பியத்தில், பொருளதிகாரம், புறத்திணையியலில் வரும் -

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

> - தொல்,1034.

என்னும் நூற்பாவில் குறிப்பிடப்பெறும், கொடிநிலை என்பது ஞாயிற்றையும், கந்தழி என்பது நெருப்பையும், வள்ளி என்பது நிலவையுமே குறிக்கும். இவைதாம் தமிழர்களின் முதல் மூன்று கடவுள்கள். அதனால்தான் அவை 'முதலன மூன்றும் என்று குறிக்கப்பெற்றன. - * - -

இவற்றின் வரலாற்று விரிவெல்லாம் மறுக்கவொண்ணாச் சான்றுகளுடன் இதன் நிறைவுரையில் குறிக்கப் பெறும். இறைவன், பிரகிருதி, பிரம்மம்: . . . - - மற்றபடி, தொல்காப்பியத்தும், கழக இலக்கியங்கள் யாவற்றினும் பரவலாக இறைவன், கடவுள், தெய்வம் எனும் மூன்று சொற்களும் குறிக்கப் பெறுவதால், மிகவும் தொன்மை நிலையிலேயே தமிழர்கள் அனைத்துக்கும் மூலமாய் முதலாய் நிற்கும் இறைமை நிலையை உணர்ந்திருந்தனர் என்பது உறுதியாகிறது. தமிழியலில் மூலப்பொருள் இறைமை என்றும், ஆரியவியலில் மூலப்பொருள் பிரகிருதி அல்லது பிரம்மம் என்றும் வழங்கப்பெறுகின்றது. مس-میسیسی سیستر - -

'இறைமை என்னும் தூய தமிழ்ச்சொல்லுக்கு, தங்கியிருப்பது நிலையாயிருப்பது, என்றும் இருப்பது, இறுதியாய் இருப்பது, மூலமாய் இருப்பது என்பவெல்லாம் பொருளாம். - ". . . . . .