பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 28

'பிரகிருதி' என்னும் சமசுக்கிருதச் சொல்லுக்கு, (பிர-முதல், கிருதி-படைப்பு படைப்பு மூலம் என்பது பொருள்.

'பிரம்மம்' என்னும் சமசுக்கிருதச் சொல்லிற்கும் 'ஆதிகரணம் அல்லது 'மூலக்காரணம் என்பது பொருள்.

இனி, எவ்வாறேனும், தொல்காப்பியத்திலும், கழக இலக்கியங்களிலும் கூட, இறைவன், கடவுள், தெய்வம் என்னும் மூன்று சொற்களும் பொருள்நிலை மயங்கியே வந்துள்ளன. இருப்பினும் அங்கெல்லாம் இம் மூன்று நிலை வணக்கங்களும் வாழ்த்துகளும்கூடக் குறிக்கப்பெறுகின்றன. எனவே, தமிழர் வாழ்வியல் நிலையிலும், பண்பாடு, நாகரிக, கலை நிலைகளிலும், இவ்விறையுணர்வும், கடவுள், தெய்வ உணர்வுகளும் கலந்தே உள்ளன என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால், ஆரியவியல் அங்கெல்லாம் மிகுதியும் விரவியிருக்கவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்லலாம். அக்காலத்துத்தான் தமிழகத்தும் தமிழர்களிடையேயும் ஆரியவியல் தலைமுட்டியிருத்தல் வேண்டும் என்பதற்கு மட்டும் சிற்சில குறிப்புகள் தெரியவருகின்றன. இவைபற்றியெல்லாமும்கூட நிறைவுரையில் மிக விரிவாகச் சொல்லப்பெறும். - - கற்பனை என்றாலும் தேவை: -

இனி, இவற்றையெல்லாம் விடுத்து, இறைவன், கடவுள், தெய்வம் ஆகியவையெல்லாம் கற்பனை என்றே கூறினாலும், அது, மாந்தவினத்தின் மேம்பட்ட சிந்தனையாளர்களால் செய்யப்பெற்ற தலையாய, மிகச்சிறந்த, உயர்ந்த, மக்கள் வாழ்வியலுக்கும், அறவியலுக்கும், ஒழுங்கியலுக்கும் மிகு தேவையான ஒரு கற்பனையே என்று முடிவாகக் கூறலாம். அக்கற்பனையால், மக்களினத்துக்கு ஏற்படும் தீமைகளைவிட நன்மைகளே அதிகம் என்பதையும் உறுதியாகக் கூறலாம். உணர்வதும் உணர்த்துவதும் எவராலும் இயலாது: -

இறைவன், கடவுள், தெய்வம் ஆகிய கருத்தெல்லாம் உண்மை என்று முழுமையாகவோ, தெளிவாகவோ, உணர்வதும் உணர்த்துவதும் எவராலும் இயலாது; அதேபோல் அஃது உண்மையில்லை அல்லது பொய் என்று முழுமையாகவும் தெளிவாகவும் உணர்வதும் உணர்த்துவதும் எவராலும் இயலாது. இது தண்ணீருக்குள் நின்று கொண்டு இது தண்ணீர் என்றும், இதுதண்ணிர் இல்லை என்றும் தருக்கமிடுவது போல் ஆகும்.

‘அளவையான் அளப்பரிது; அறிவின் அப்புறத்து உளவைஆய் உபநிட தங்கள் ஒதுவ: கிளவிஆர் பொருள்களால் கிளக்கு றாதவன் களவையார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார்

- கம்ப. 6250