பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 30

ஆனாலும், இத்தனையும் உள்ள பொழுது அந்த மூலத் தேங்காயை நாம் காண முடியவில்லையே, அஃதும் இவ்வாகிய பொருள்களுடன் இருக்கவில்லையே!. அஃது இல்லையாகிவிடுகிறது! எனவே, இல்லை.

இந்த நிலைதான் அனைத்துக்கும் மூலமாய் ஆதியாய் இருக்கின்ற இறைமைக்கும் உண்டு, இல்லை ஆன உண்டில்லை - ஆன நிலை என்க. -

கற்பனை மகிழ்வும் நிறைவும் தருவது:

இறைமையை அல்லது இறைவனை, கடவுளை அல்லது தெய்வத்தை (எல்லாமே ஒரு வகையில் வேறுவேறும், அதே பொழுது இன்னொரு வகையில் ஒன்றும் ஆகும் என்பது இயற்கையியலின் ஒரு மெய்ம்மம்) ஓர் உருவமாகக் கருதினாலும், அல்லது உணர்வாகக் கருதினாலும் அல்லது கருதாவிட்டாலும், வணங்கினாலும் அல்லது வணங்காவிட்டாலும், அந்த உணர்வு அல்லது அறிவு மக்களுக்குத் தேவை என்பதும், அவ்வுணர்வால் மாந்தனுக்கு இவ்வுலக வாழ்வில் ஒருவகைப் பிடிப்பும், நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், நிறைவும், மகிழ்வும், ஆராய்ச்சி உணர்வும், அன்புணர்வும், அறிவு மேம்பாடும் உண்டாவதையும் அனைவரும் ஆழ எண்ணிப் பார்த்தால், அல்லது அளவை முறையாகச் சிந்தித்துப் பார்த்தால், இவ்வுண்மையை ஒப்பவே செய்வர் என்பதையும் உணர்க.

உண்மையான ஏதோ ஒன்று கண்களுக்கோ மனத்துக்கோ கிடைக்காமல் போகையில், கற்பனை ஒருவகையில் மட்டுமன்று, மனத்துக்குப் பலவகையிலும் மகிழ்வையும் நிறைவையும் அளிப்பது.

உள்முகமாக ஒரு துணை, ஒர் ஆதரவு தேவை:

உலகில் நாம் அனைவரும் தனித்தனியாகத்தான் பிறக்கிறோம்; மற்ைகிறோம். ஆனாலும் அனைவரும் ஒன்றாய் இருப்பதாக நினைக்கிறோம். அவ்வாறு உணர்ந்தாலும், நாம் அனைவரும் தனித்தனியாகத்தான் சிந்திக்கிறோம்; உணர்கிறோம்; கருத்தை அசைபோடுகிறோம்; இன்ப உணர்வையும் துன்ப உணர்iலவையும் செரித்துக் கொள்கிறோம். மனம் அவ்வாறு துன்பவுணர்வுகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்கும்பொழுது, சொல்லவொண்ணாத் தாக்கங்களுக்கு உள்ளாகிறது. அக்கால் நாம் தனியாகவே இருப்பதாக உணர்கிறோம். அதுபோன்ற நிலையின் பொழுதுதான் நமக்கு உள்முகமாக ஒரு துணை, ஓர் ஆதரவு தேவைப்படுகின்றது.

சமயம், மதம், மெய்யறிவியல்: -

அப்பொழுதுதான், நம்மையறியாமல், நம் மனம், முன்னரே நாம் கேள்வியுற்றிருந்து, நம் அறிவுணர்வில் மொய்த்துக் கொண்டிருந்த, நமக்கு