பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

31


3i அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

ஏதோ ஒரு வகையில் யாராலோ அல்லது நூல்களாலோ சிறு அகவைப் பொழுதிலிருந்து அறிமுகப் படுத்தப்பட்டிருந்த இறைவனை, அல்லது ஏதோ ஒரு கடவுளை, அல்லது ஒரு தெய்வத்தை, நம் அறிவு ஏற்றுக் கொண்டாலும், புறக்கணித்தாலும், மனம் விரும்புகிறது. அக்கருத்துகள், ஒருவேளை, உண்மையாயிருக்குமோ என்னும் ஐயவுணர்வோடு அசைபோடுகிறது, மனம். பிறகு படிப்படியாக ஏற்றுக்கொள்ள அணியமாகிறது, அது. எனவே, மனம் கிடந்து தவிக்கும் அச் சூழ்நிலையில், தாயுணர்வினும் மேலான ஓர் அன்புணர்வை, ஆதரவை அதனிடமிருந்து எதிர்பார்க்கிறோம். மனம் அதை விரும்புகிறது; வேண்டுகிறது. இது முட்டை குஞ்சு பொரிக்கின்றது போன்ற ஒரு நேரம், பூ மலர்ச்சியுற்று மணம் பெறுகின்ற ஒரு சமையம்; காய் பழுத்துச் சுவை பொதுளுகின்ற (கொழிக்கின்ற (expose - ஆகின்ற ஒரு காலம்; பெண் வடிவாகிக் கன்னியாகிக் கனிந்து நிற்கின்ற ஒரு பருவம்; உலையிலிட்ட அரிசி, சோறாகச் சமைந்து வருகின்ற சமையம். எனவே மனமும் இவற்றைப் போல் பக்குவம் (மெய்யுணர்வு பெறுகின்ற ஒரு காலநிலை, இது. இதைத்தான் சமைதல் - பக்குவப்படுதல் - சமையம் - சமயம், என்கிறது, தமிழியலான மெய்யறிவு. இதை, தீட்சம் (தானாக மனத்துள் நிகழ்வதை (சம்பவிப்பதை வெறுக்காமல் துய்ப்பது (அநுபவிப்பது) என்கிறது, ஆரியவியல். (சமயம், மதம் இரண்டும் தமிழ்ச் சொற்களே. மதம் என்னும் சொல்லையே ஆரியமும் பயன்படுத்துகிறது; இந்து மதம், வேதமதம் - என்னும் வகையில் என்க. ஆனால் சமசுகிருதத்தில், தாத்துவீகம்-தத்துவம் - தத்தம் - தாந்தம் - வேததாந்தம் - வேதாந்தம்; சித்ததாந்தம் - சித்தாந்தம் - என்கின்றனர்) இவற்றின் விரிவையும் எம் நிறைவுரையில் காண்க)

மனவுணர்வும், அறிவுணர்வும்: -

மனம் மெய்யுணர்வு எய்திய பின்னை மெய்யறிவுக்கு அவாவுகிறது. மனவுணர்வாக நின்ற அது, பிறகு அறிவுணர்வையும் உடன் சேர்த்துக் கொண்டு, மெய்ப்பொருள் உசாவலில் (தத்துவ விசாரணையில்) ஈடுபடுகிறது. இங்கு மனம் என்பதும் அறிவு என்பதும் வேறு வேறு உணர்வுகள், ஒளியும் ஒலியும் போல - என்பதை உணர்தல் வேண்டும். இரண்டும் ஒன்று என்பாா, அறியாதவர். இவை பற்றியும் விரிவாக எம்

1. உருவமாகக் கருதினாலும் உணர்வாகக் கருதினாலும் - என்பது பற்றிய ஒரு சிறு

விளக்கம். ...”. உருவம் காட்சியான் பெறுவது. உணர்வு மனத்தால் உறுவது. மனம் ஒன்றைக் காட்சியளவையான் கண்டு கண்டு பழகிவிட்டால், அஃது உணர்வாக மனத்தில் நிலைபெற்றுவிடுகிறது. தாயின் உருவம் உணர்வாகி என்றும் மனத்துள் நிற்பது போல என்க. : : - ..