பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

33


33 அ - 1 - அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

கூறப்பெறுகிறது. ஏனெனில், இவ்வுண்மை அந்த நேரத்தில்தான் விளங்கும் என்பது அவர் கருத்து. அவையறிந்து ஆராய்ந்து சொல்லுதல் (71) அவருடைய கோட்பாடு ஆதலால், சிற்றின்பம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவ்வேளையில் பேரின்பமாகிய மெய்யறிவின்பத்தின் உசாவல் நிலைக்கு விடைகூறுகிறார். ஏன்? அந்த இன்பமும் - அச்சிற்றின்பமும் - நமக்கு விளங்குவதில்லை; இம்மெய்யறி வின்பமும் விளங்குவதில்லை என்கிறார். ஆனால் உணர்கிறோம். பிறர்க்கு உணர்த்த முடிவதில்லை. இதைத்தான் திருமூலர் சொல்கிறார், இப்படி:

மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய, சுகத்தைச் சொல் என்றால், சொல்லுமா றெங்ங்னே?

(திருமந். 2944) ஒரு தாய் தன் கணவனோடு துய்த்த உடலின்பத்தை மகளுக்கு அவள் கேட்டாலும் எப்படிச் சொல்ல முடியும்? அவ்வாறு இம்மெய்ப்பொருள் இன்பத்தையும் எவராலும் சொல்லி உணர்த்த முடியாது; தாய் தன் மணாளனிடம் பெற்ற இன்பத்தை மகளும் அவள் கணவனிடம் பெற்றுத்தான் உணரமுடியும்’ என்பதை நம் மெய்யறிவர்களாகிய திருவள்ளுவரும் திருமூலரும் எவ்வாறு உணர்த்தியிருக்கின்றனர் என்பதை உணர்ந்து மகிழ்க திருவள்ளுவருக்குப் பின்னர் வந்தவர் திருமூலர் ஆகையால், அவரின் கருத்தையே இவரும் இலக்கிய வடிவில் இன்னும் சிறிது கூடுதலாக எடுத்துக்காட்டுடன் விளக்கியுள்ளார் என்று அறிக)

இப்போராட்டம் எப்பொழுது நிற்கும்?

எனவே, இந்த மன அறிவுப் போராட்டம் என்றென்றும் நிகழ்ந்து கொண்டே வந்திருக்கிறது. நிகழ்ந்து கொண்டே போகிறது; இனி என்றென்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். எதுவரை இவ்வுலகம் உள்ளளவும். இது முற்றுப்பெறவே பெறாது; முற்றுப்பெறவும் கூடாது' என்பதும் ஒரு மெய்ப்பொருள் உண்மை. இது முற்றுப்பெறாமல் இருக்கும் பொழுதுதான், இவ்வுலகமும் புடவியும் உயிர்களும் இயற்கையும் இயங்கிக் கொண்டிருக்கும். இது முற்றுப்பெறும் பொழுது, இவ்வுலகம் இராது; நாமும் இருக்க மாட்டோம். எல்லாவற்றோடும் நாமும் ஒன்றாகி விடுவோம். விளங்கவில்லையா? அறிவு கலங்குகிறதா? கலங்கத் தேவையில்லை. மண்ணில் புதைத்த தேங்காய் காணாமற் போனது போல, இவ்வுலகமும் காணாது போய்விடும்; நாமும் காணாது போய், அனைத்துடனும் ஒரே மரமாக ஆகிவிடுவோம். அப்பொழுதும் புடவி இருக்கும்; கதிரவன் இருக்கும்; விண்மீன்கள் இருக்கும்; நாமும் அந்த மரம் போல் ஒரே உயிர்த்திரட்சியாக, ஒளித்திரட்சியாக ஒலித்திரட்சியாக விண்ணின்கண் இருந்துகொண்டிருப்போம். என்ன? வியப்பாகவிருக்கிறதா? அல்லது