பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 34

குழப்பமாக இருக்கிறதா? வியக்கவும் வேண்டியதில்லை, குழம்பவும் வேண்டியதில்லை. x - முன்பு எப்படியிருந்தோம்? எங்கிருந்தோம்?

இப்பொதுள்ள நிலைக்கு வருவதற்கு முன்னர் நாம் எப்படியிருந்தோம்: எங்கிருந்தோம்? நாமும் இவ்வுலகமும், இதிலுள்ள புல் பூண்டுகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் தீக்குழம்பாக இருந்தோம்; அதற்கு முன்னர் ஒளித்திரட்சியாக இருந்தோம்; அதற்கு முன்னர்க் கதிரவனில் இருந்தோம் என்ன? நாம் உரைப்பது அறிவியல், மதவியல் இல்லை; தூய மெய்யறிவியல்! .

இப்பொழுது எண்ணிப் பாருங்கள். நாமும், இவ்வுலகமும் அப்பேரொளிக் கோளமாகிய கதிரவனிலிருந்துதானே வந்தோம். அவ்வொளிக் கோளம் நெருப்பாகி, நெருப்புக் குழம்பாகி, ஆறி, இறுகலுற்றுக் குளிர்ந்து, மண்ணாகி, மண்ணில் நீராகி, நீரில் உயிரணுக்கள் தோன்றி, நீந்துவனவாகி, நிலத்து ஊர்வனவாகி, பறப்பனவாகி, நடப்பனவாகி, மாந்தனாகிப் படிநிலை பரிணாம வளர்ச்சி பெற்று வரவில்லையா? அறிவியல் உணர்வும் இதுதான் மெய்யறிவியல் உணர்வும் இதுதான். அறிவியலுணர்வு பொருள்கள் (matte) உடன் இணைந்து நிற்கும்; மெய்யறிவியலுணர்வு ஆற்றல் (energy) உடன் இணைந்து அறிவாகி, உணர்வாகி நிற்கும். பொருள்கள் மீண்டும் ஆற்றலாகும்; ஆற்றல் மீண்டும் பொருள்களாகும். பொருளில் ஆற்றலுண்டு; ஆற்றலில் பொருள்களுண்டு. இதுதான் இயங்கியல், இயற்கையியல், அறிவியல், பொருளியல், உயிரியல், பயிரியல், மாந்தவியல், நிலவியல், விண்ணியல் முதலிய அனைத்தும்: இதை இத்துடன் நிறுத்திக்கொண்டு மேலே விரிவோம். . வினாவும் விடையும்! விடையும் வினாவும்! - . இவ்வாறு வினாவும் விடையும், விடையும் வினாவுமாக இயங்கிக் கொண்டிருக்கும் மன அறிவு உணர்வுகளின் போராட்டம் நாம் இருக்கின்ற வரை, இவ்வுலகம் இருக்கின்றவரை, இருந்து கொண்டேயிருக்கும் - - - என்ன? அதுதான் முடிவில்லா நிலை

இதில் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் இந்த நிலையில் இறுதியான கேள்வி, முட்டை

உயிர் முந்தியதா என்பன போன்றுதான். ய்யறிவும் f

- &T F# (Rationalism-Reasonalism) = #(Mursö பாருளை உணரமுடியாது என்று மெய்யறிவியல் philosophy