பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 36

இந்த உள்ளுணர்வால் காணும் உண்மைகள் கற்பனையில்லை. அவை இருப்பவை என்றுமே இருப்பவை. அவைதாம் மெய்ம்ம உண்மைகள் (Philosophical truth$), 3|66)6u Blb Lqavg9135 Tfrə)j5615&65ıb, Əlöləşd#©jıb gTGör பகுத்தறிவுக்கும் ஆய்வுக்கும், அளவைகளுக்கும் தருக்கங்களுக்கும் கூடப் புலப்படாதவை. இன்னும் கூறுவதானால், இன்றைய பல அறிவியல் உண்மைகளையும்கூட, கண்டுபிடிப்பதற்கு அந்த உள்ளுணர்வே அறிஞர்களுக்கு உதவியிருக்கின்றது.

ஆய்ந்தும் காணாப் பொருள், ஆராயப்பட்டு அறியார், சோதித்தார் காணாமை, அறிவரு ஞானத்து எவரும் அறியார், பொறிவழித் தேடிப் புலம்புகின்றார்கள் என்றெல்லாம் சமயக்குரவர்கள் கூறியுள்ளனர். எனவே உள்மனத்தால் மட்டுமே அறியமுடிகின்ற உண்மை அது - என்று மெய்யறிவாசிரியர்கள் கூறுவர் என்க. ... . .

அந்த உள்மனம், பொதுவாக அனைவர்க்குமே செயல்படுவ தில்லை. அனைவர்க்கும் செயல்படுவது புறமனமே அல்லது வெளிமனமே என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். எனினும், அந்த உள்மனத்தையும் நாம் செயல்பட வைக்க முடியும். அதற்கு ஆழமான, ஒருங்கிணைந்த, மனவுணர்வுகளைப் புறத்தே பாயவிடாமல், அகத்தே ஒடுக்கி நிற்கின்ற ஒருமுகப்படுத்துகின்ற (Concentratioா மனப்பயிற்சிகள் வேண்டும்.

மனவியல் மருத்துவத்திலும், இவ் வுள்மனத்தை அறிதுயில் (Hypnotism) நிலைக்குக் கொண்டுசென்று அஃதாவது ஒருவரை அந்நிலைக்கு உட்படுத்தி - அதைச் செயல்பட வைத்து, அதில் வெளிமணம் மறந்து போய்விட என்றோ நடந்து புதைந்து போயிருக்கின்ற உடலின் அல்லது உள்ளத்தின் அல்லது அறிவின் உண்மைகளை அவரின் வாயாலேயே, தம்மையறியாமல் சொல்லும்படி செய்து உணர்கின்றனர்.

ஒகம், ஊழ்கம்

துறவியர்களும், மெய்யறிவர்களும் இந்த மனப் பயிற்சியை ஒகம், ஊழ்கம் (தியானம் - Meditatio) என்று கூறி, அந்த ஆழ்மனத்தை அல்லது அடிமனத்தை அல்லது உள்மனத்தைச் செயல்பட வைத்து, நாளடைவில் அதை மேலும் மேலும் கூர்மையுடையதாக (locus ஆக்கி, புறத்தே உணரமுடியாத பல இயற்கை உண்மைகளை உணர்கின்றனர். பிறர் மனங்களில் உள்ள உணர்வுகளையும் உண்மைகளையும்கூட அறிகின்றனர். இந்த மனவியல் சார்ந்த அறிவியல் துறைக்குத் தொலைவறிவியல் (Teleology) என்றும், அவ்வாறு அறியும் திறனைத் தொலைவிலுணர்தல் (Telepathy) என்றும் வழங்குகின்றனர். இந்த மனப்பயிற்சி என்பது, உடற்பயிற்சி போன்றதே கனமான பொருள்களைத் தூக்குவது, நெடுந்துாரம் ஒடுவது, உயரந்தாண்டுவது, உடலைப் பல கோணங்களிலும் வளைப்பது, இயக்குவது, மலையேறுவது, குத்துச்சண்டை, மல்லு, களரி, வலிச்சைகள்