பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

37


*

37 அ - 1 -1 அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

(Gymnastics) செய்வது போன்ற திறப்பாடுகளை உடற்பயிற்சி வழியாகச் செய்வது போன்றதே) இறையியல் கோட்பாடு

இவ்வாறான, மனப்பயிற்சிகளின் வழி மனத்தை ஒருமுகப்படுத்தி, உள்மனத்தை விழிக்கச் செய்து, அதன் உணர்வு வழியாக உணரப் பெறுவதுதான் மெய்யறிவு என்பது. இதன் தொகுப்பியல் அறிவுதான் மெய்யுணர்வியல் அல்லது மெய்ப்பொருளியல் என்பது. இதன் வழியாக அறியப்பெறுவதே மெய்ம்மங்கள் (Philosophical Truths) என்பவை. இம் மெய்ம்மக் கோட்பாடுகளைத் தமிழர் மதவியலில் முப்பத்தாறு வகையாகப் பகுத்துள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் இறைமைக் கோட்பாடு என்னும் இறையியல் (Theology) என்பது. இவை பற்றிய அனைத்து விளக்கங்களும், நிறைவுரையில், இவ்வதிகாரத்தின்கண் முழுமையாக விளக்கப்பெறும். விரிவாக உணர விரும்புவோர் ஆண்டுக் காண்க)

எஃது எவ்வாறாயினும், உண்மையோ, பொய்யோ, நன்மையோ தீமையோ, இன்பமோ துன்பமோ, அன்போ அறிவோ, வன்மையோ கொடுமையோ, அறமோ மறமோ, இயற்கையோ செயற்கையோ, அது இது, அங்கு இங்கு அப்படி இப்படி - என்றில்லாமல், எல்லாவற்றிலும், கண்ணுக்குத் தெரியும் தெரியாத, காதுக்குக் கேட்கும்.கேட்காத, மூக்குக்கு வரும்-வராத, வாய்க்குத் தெரியும்-தெரியாத, உடலில் ஊறும் ஊறாத அனைத்து உயிர்களின் உணர்வு, அறிவு நிலைகளிலும் - இறைமை உணர்வு கலந்தே இருக்கிறது - என்பது மெய்யறிவு.

"எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய், அங்கங்கிருப்பது, நீ - அன்றோ பராபரமே

- என்பார் தாயுமானவர். 'பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்ததோர் படரொளிப் பரப்பே'

- திருவாசகம். 22-8 'பண்ணின் ஒசை பழத்தினில் இன்சுவை

- திருநாவுக்கரசர் திருக்கச்சி யேகம்பம் ஆக்கம் அளவிறுதி இல்லாய்! அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்'

- - திருவாசகம் 141 எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதி

- திருவாய்மொழி 3.2-7