பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 38.

இயங்குகின்ற அனைத்துமாய்

இயங்கிலாத எனைத்துமாய் மயங்குகின்ற மனத்துளே

மயக்கறுக்கும் உணர்வுமாய் வயங்குகின்ற நோக்கெலாம்

வயப்படுத்தும் அறிவுமாய் முயங்குகின்ற ஒளியினை

மூப்பமூப்ப உணர்வரே!

- உரையாசிரியர்

இறைமை, கடவுள், தெய்வம் :

இனி, இறைமை, கடவுள், தெய்வம் என்று சொன்னவுடனேயே கோயில்களில், சிலைகளில், ஓவியங்களில் பார்க்கும் உருவங்களை நினைத்துச் சிலர் மகிழவும், வெறுக்கவும் செய்கின்றனர். உண்மையில் அவையோ, அல்லது நூல்கள் வழிப் புலப்படுத்தப்பெறுகின்ற சொல்லுருவங்களும் கருத்துருவங்களுமோ, கடவுளோ, இறைவனோ, தெய்வமோ அல்ல என்பதை உண்டு என்னும் உணர்வினரும், இல்லை என்று சொல்பவரும் உணர்தல் வேண்டும்.

இறைவன் ஏன் நேரில் வருவதில்லை :

இனி, இறைமறுப்பாளர் சிலர், இறைவன் இருந்தால் ஏன் நேரில் புலப்படுவதில்லை. ஏன் நம்முடன் தொடர்பு கொள்வதில்லை’ என்றெல்லாம் வினாவுவதற்கு, இறையுண்மையார், அவ்வாறு மெய்யறிவர் (ஞானியர்)க்கும், துறவியர்க்கும், தூயருக்கும் புலப்பட்டிருப்பதையும், தொடர்புகொண்டிருப்பதையும் தொன்மைக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டி, அமைவு கூறுவர். இவ்விரு நிலைகளினும் கருத்துச் செலுத் தாமல், ஒரு மனவியல் உண்மையை நாம் இங்குக் கருதுதல் வேண்டும். அதன்வழிநமக்கு நேரில் புலப்படாமைக்கும், நம்முடன் வந்து உறையா மைக்கும் அடிப்படையான ஆறு கரணியங்கள் உண்டு. அவை இவை:

1) தனியொருவர் வழிபாடு கூடாது என்னும் உணர்வு மக்கட்குப் பொதுவான ஒரு மனநிலை. அவ்வாறு ஏதோ ஒரு நன்மை கருதி வழிபடுபவர்கள்கூட, தாம் விரும்பிய நிலை வாயாவிடத்தோ அல்லது குறைவுறும் இடத்தோ, அந்நிலையைக் கைவிட்டு வெறுப்பார். இந்நிலையில் இறைவன் நேரில் வருவதை அத்தகையர் விரும்பார். விரும்பினும் தங்கட்குள் உள்ள ஏற்றத் தாழ்வு கருதிப் புகைச்சலும், பொறாமையும், பூசலும் விளைவித்துக்கொண்டு ஒருவருடன் ஒருவர் பொருதி மாய்வர்.

2) இறைவன் எந்த ஒரு வடிவத்தில் (பறவை, விலங்கு, மாந்தன் முதலிய உருவில் வெளிப்படினும், நிலை எப்படியெப்படி இருக்கும்,