பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

39


39 அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

உலகியல் நடைமுறை நிலையில் என்னென்ன மாறுதல்கள் நடக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க

3 ஒரு தந்தையைப் பிள்ளையோ, ஓர் ஆசிரியனை மாணவர்களோ, தம்மிடம் இருத்திக் கொள்ளவோ, அவர்கள் தம் வாழ்வியல் நிலைகளுடன் எப்பொழுதும் ஒன்றி இருப்பதையோ, தம் நிகழ்ச்சிகளில் குறுக் கிடுவதையோ விரும்பமாட்டார். அவ்வாறிருக்க இறைவன் அவ்வாறு ஈடுபடுவதை மக்கள் விரும்பார். -

4) இறைவனை இப்பொழுதும் எப்பொழுதும் எவரும் விரும்புவதோ மதிப்பதோ இல்லை. அவனை வெறும் வழிபடு பொருளாகவே கருத விரும்புகின்றனர். அவ்வாறு எப்பொழுதும் வழிபட்டுக் கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவ்வப்பொழுது மட்டும் வழிபடுதலை விரும்புகின்றனர், எண்ணிப் பார்க்க

5) ஒரு ஞாயக்காரர், அல்லது அறமன்ற நடுவர், அல்லது ஒரு நடுநிலையாளர் தம்மோடு எப்பொழுதும் உறைவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அதுபோலவே பல்வகையான குற்றம் குறைகள், விருப்பு வெறுப்புகள் உள்ள உயிர்கள் இறைவன் தம்முடன் இருப்பதையோ ஊடாடுவதையோ விரும்புவதில்லை. /

ஒ இனி, அறிவுணர்வும், மனவுணர்வும் வளர வளர நாமே நம்மைத் தனிப்படுத்திக்கொண்டு இருக்க விரும்புகின்றோம். நம்மோடு சுற்றியுள்ளவர்களுடைய தாறுமாறான அறிவு, மன இயக்கங்களும், உடலியக்கங்களாகிய ஆரவாரப் பகட்டுச் செயல்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியனவும் நமக்குப் பல நிலைகளில் பல வேளைகளில் பலவாறான துன்பங்களையும் இடையூறுகளையும் விளைவிக்கின்றன. எனவே நாம் இவற்றிலிருந்தெல்லாம் விலகியிருக்கவே விரும்புகின்றோம். இறைவனும் தன் மேம்பட்ட வாலறிவுணர்வாலும், தூய்மையான மனவுணர்வாலும் தனித்து இருக்கவே விரும்புகிறான் என்க.

இங்கு மாந்தனினும் பலகோடி நூறுமடங்கு பெருகிய வாலறிவும், பொய்தீர் ஒழுக்க நெறியுணர்வுந்தாம் இறைமை என்பது ஒரு மெய்யியல் கோட்பாடு என்பதை உணர்தல் இன்றியமையாதது. -

இன்ன பிற கரணியங்களால், இறைவன் தம்மோடு இருப்பதை மக்கள் விரும்புவதில்லை. இன்னும் அவன் தம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், தாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறான் . என்பதையும்கூட அவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் மொத்தத்தில் அவன் இருக்கிறான் என்பதைக்கூட அவர்கள் விரும்புவதில்லை; அதனால் ஒப்புவதும் இல்லை என்க. - -