பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 40

பல்வேறு உருவங்கள் :

இனி, இறைவன் உள்ளான் எனும், கற்றவரின் உணர்வு நிலை, கல்லாத பொது மக்களுக்கு விளங்காத தன்மையில், உருவ நிலைகள் தோன்றின. அவை மக்கள் படிநிலை வளர்ச்சி, கால, இடமாற்றங்கள் அடிப்படையில் பல்வேறு வடிவங்களாகப் பல்கிப் பெருகின. இஃது அவரவர்க்கு வேறுவேறு வகையான காய்கறிகள், பழங்கள், சுவைகள் பிடிப்பதைப் போன்றது; அதற்கிணையானது என்க. எனவே, இவ்வுருவ வேறுபாடுகளைக் கொண்டோ, அவற்றின் அமைப்புகளைக் கொண்டோ, அல்லது அவற்றைப் பார்த்த மட்டில் நமக்குள் ஏற்படும் வெறுப்பு விருப்புகளைக் கொண்டோ, அவ்வுணர்வு நிலைகளையே தேவையில்லை என்று கருதுதல் அறிவுடைமை ஆகாது. -

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே - என்பார் திருநாவுக்கரசர்.

அறிவுடைமை என்பது மக்களியல், மக்கள் நலம் கருதியதாகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். எவ்வளவு சிறந்த அறிவுக் கோட்பாடாயினும், அது மக்கள் நலம் கருதியதாகவே, மக்களின் பண்பியலுக்குப் பொருந்தியதாகவே இருத்தல் வேண்டும் என்பது ஆசிரியர் கருத்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். (997) - என்னும் குறளில், மக்கட் பண்புதழுவிய நலத்தைக் கருதாதவர் எவ்வளவு பெரிய சிறந்த அறிவுக் கூர்மையுடையவராக இருப்பினும் அவர் ஓரறிவுயிராகிய வளர்ந்து நிற்கும் மரம் போன்றவரே ஆவர் என்பதைத் தெளிவாகக் கூறுதல் காண்க. மேலும், அவர், -

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப் படும். (850) என்னும் குறளில், உலக மக்களியலுக்குத் தேவை என்று கருதிச் சில நிலைகளை உண்டு என்று நம்பிக்கை அடிப்படையில் கூறுவதை ஒருவர் திறனாய்வு செய்து, அவற்றின் அறிவு நிலைகளையும் மூடநிலைகளையும் விளக்கி, அதில் ஒரு தெளிவை அவர்களுக்குக் கற்பிக்கலாமே தவிர, அடியோடு அதனை மறுத்தல் கூடாது என்பதும், அவ்வாறு மறுப்பவர் மாந்த நிலைக்கு மாறுபட்டவராகக் கருதப்படுவார் என்பதும் கவனிக்கத் தக்கன, என்க.

மேற்சொன்ன இவ்விரண்டு உண்மைகளும் மெய்ப்பொருள்', கோட்பாடும் மக்களியலும் (Socialogy) மக்கள் மனவியலும் (Social