பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 48.

மதவுணர்வு கூடாது என்பதை வலியுறுத்தினார் என்க. இனி இதனினும் மேலாக அற்றையிருந்த மதங்களிலேயே மிகவும் கீழான ஆரியரின் வேத மதம் (இன்றைய இந்து மதம் தவிர்க்கக் கூடியது என்பதை அதன் அடிப்படை நடைமுறையைக் கூறிப் புலால் மறுத்தல் அதிகாரத்துள்,

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று (259)

என்னும் குறளில் அறிவுறுத்துகிறார்.

இனி, இவையே யன்றி அந்த ஆரிய மதமான வேத மதத்தின் கோட்பாடுகளை ஆங்காங்கே கண்டித்துக் கூறியதையும், அவ்வவ்விடத்தில் சுட்டிக் காட்டுவோம், என்க.

திருவள்ளுவர் காலத்துக் கடவுள் கொள்கை:

திருவள்ளுவரின் காலத்தில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டு கடவுளை வணங்கும் வழக்கம் இருந்தது. அவ்வளவு அழுத்தமாக அஃதில்லையெனினும் கடவுளை வாழ்த்துவது ஒருசார் மக்களிடம்

தொல்காப்பியத்துள்,

‘வாழ்த்தியல் வகையே நாற்பாவுக்கும் உரித்தே'

- தொல், இளம் 1366, - என்னும் நூற்பாவால் கடவுள் வாழ்த்து இருந்தது எனத் தெரிகிறது. இனி, அதிலேயே,

'வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ'

- - தொல், 1967

என்பதானும், -

'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண்டு உடைத்தே

- தொல் இளம் புறத் 5 - என்னும் நூற்பாவில் கூறப்பெற்ற நாலிரண்டு (எட்டு என்னும் சொல்லுக்கு இளம்பூரணர் உரையெழுதுகையில் அவ்வெட்டு வகைப் பாடாண் வாழ்த்துள் கடவுள் வாழ்த்தையும் முதலாக வைத்துப் பொருள் கூறுவதானும், தொல்காப்பியர் காலத்திலேயே (கி.மு. 7ஆம் நூற்றாண்டு) கடவுளை வாழ்த்தும் வழக்கம் இருந்தது உறுதிப்படுகிறது.