பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

49


49 அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1 - முன்னுரை

இன்னொரு கருத்தையும் நாம் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுவாகப் பண்டையில் கடவுள் வாழ்த்து என்பது, இறைவன் இயன்மொழி வாழ்த்தாகவே இருந்தது. பிறகு வரவரத்தான் மாந்தன் தன்னலத்திற்காகவே இறைவனை அல்லது கடவுளை வாழ்த்தத் தொடங்கியிருக்கின்றான். அஃதாவது வாழ்த்தி வேண்டத் தொடங்கியிருக்கின்றான். -

உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யார்.அவர் தலைவர் அன்னவர்க் கே சரண் நாங்களே - என்னும் கம்பரது கடவுள் வாழ்த்தையும்,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா - - என்னும் பிற்கால ஒளவையார் பாடலையும் கவனித்து உணர்க.

இறைவனிடம் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று வேண்டுவது தன்னலவுணர்வே, பொது நலவுணர்வுடன்தான் இறைவனை வழிபடுவதாயின் வழிபடுதல் வேண்டும். அல்லாக்கால் வழிபடாமலிருப்பதே நல்லது. -

இது பெற்றோரிடமிருந்து நன்மைபெறுவதற்காக, அவர்களிடம் வணக்கமாகவும், பற்றுதலாகவும் அன்பாகவும் நடந்துகொள்வதையும் அல்லது அவர்கள்தாமே தனக்கு விரும்பியதைச் செய்யட்டும் என்று விட்டுவிட்டுத் தான் இயல்பாகத் தன் கடமைகளைச் செய்து கொண்டிருப்பதையும் போன்றது. இரண்டிலும் போலித்தனமோ தன்னலமோ இருக்க வேண்டுவதில்லையன்றோ?

இம் முதலதிகாரத்தில் இன்ப வேண்டுதல் இல்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இலான் என்பது வழிபடுவான் உணர்வைக் குறித்த கருத்தே. இன்ப வாழ்க்கைக்கு இறைவனை வேண்டுவது பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பது போன்றது, என்க.

இனி, கழக விலக்கியங்களில் பாரதம் பாடிய பெருந்தேவனார் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு ஆகியவற்றுள் சிவனை வாழ்த்தியும், நற்றிணையில் திருமாலையும், குறுந்தொகையில் முருகனையும் வாழ்த்தியும் கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடி முன்னிணைத்துள்ளார்.

'கலித்தொகையிலும் சிவன் வாழ்த்தாக ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலை நூலின் முன் இணைத்துள்ளனர். இதை யார் பாடினார் என்று