பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

51


பிள்ளைக்கு ஊரார் பல பெயர்கள் இட்டு அழைப்பது போல நூலாசிரியர் இட்டிராத தலைப்புக்குத் தம் தமக்கு உகந்ததாகப்பட்ட வேறுவேறு தலைப்புகளை இடலாயினர்.

இவ்வகையில் இறைநலம் எனப் புலவர் குழந்தையாரும், இறைவாழ்த்து எனப் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரும், முதற்பகவன் வழுத்து என மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், ஆதிபகவன் வாழ்த்து என இருக்கலாமெனப் பேராசிரியர் வ.சுப. மாணிக்கனாரும் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. -

இந்நிலையில் பரிமேலழகரால் குறிக்க பெற்றிருத்தல் வேண்டும் எனக் கூறும் கடவுள் வாழ்த்து என்னும் பெயரும், மேற்குறித்த அறிஞர்கள் வைத்துள்ள நால்வகைப் பெயர்களும் பிறர் சிலர் இட்டுள்ள வேறு பிறவும், பல்வகைக் கரணியங்களால் பொருந்துவனவாக நாம் கருதவில்லை.

அறமுதல் உணர்தல்:

மூலத்திலிருந்து எவ்வகையானும் குறை கூறற் கியலாத மிகச் சிறந்த உரையாசிரியராகிய பரிமேலழகரும், நீத்தார் பெருமை அதிகாரத்துத் தம் முன்னுரையுள், அவ் வற முதற் பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவராகலின். என்று குறித்திருப்பதும் . அக் கூட்டுச் சொல்லின் பொருள் வேறானாலும் - இத் தொடர் அமைய ஒரு கருதலுணர்வை நமக்குத் தந்தது.

இறையுணர்வாகவன்றி, அறமுதல் உணர்வாக நாம் அதைக் கருத வேண்டுவது, கருதலளவையான் உண்டென்பார்க்கும் இல்லையென்பார்க் கும்கூடப் பொருந்திய கருத்தாக இருப்பதுடன் இவ்வுலகின்கண் உள்ள அனைத்துக் கூறினர்க்கும் பொதுவானதும், ஒப்புக் கொள்ளத் தக்கதுமான கருத்தாகவும், அதே பொழுது நூலாசிரியர் கருத்துக்கு மாறில்லாததாக விருப்பதும் கருதத் தக்கதாம் என்க.

இல்லையும் இருக்கிறதும்!

(இல்லை என்பதும் இருக்கிறது என்பதும் ஒரு வகை மெய்ம்மக் கோட்பாடு அதன் பல்வேறு உருவளவை பரிமாணக் கருத்துகளை இங்குக் காணலாம். இதில் உள்ள ஒவ்வோரடியும் ஒவ்வொரு வகையில் மூலக் கருத்தை வலியுறுத்துகிறது. எண்ணிக் காண்க)

இல்லை என்று ஒன்று இல்லை!

இருக்கிறது என்றும் ஒன்று இல்லை!

இல்லையும் இல்லை; இருக்கிறதும் இல்லை;

இருக்கிறதும் இருக்கிறது; இல்லையும் இருக்கிறது: