பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் - 54

சில விளக்கக் குறிப்புகள்:

1)

ஆதி பகவன் - மூல அறமுதல் கூறாகிய இறைவன். ஒளியும் உணர்வுமாகி அறமுதல் கூறாய் இயங்கிக் கொண்டிருக்கும் இறைமையை, அறிதற்கு எளிதாய் வடிவப்படுத்திப் பால் தழுவி ஆதி பகவன் அஃதாவது, மூல இறைவன் என்றார் ζΣΤζί",35. இனி, ஒளிக்கும் மூலமாய் நின்றது ஒலி. அஃது உணரப்பெறாது ©T☾FᎦᏚ.

ஆதி பகவன் . இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உயர்திணைப் புணர்ச்சியாகலின் ஒற்று மிகாமல் வந்தது. இகர ஈறாயின் இருவழியும் என்க. 'ஆதி தமிழ்ப் பெயரே. 'ஆதன்' என்னும் ஆண்பாற் பெயருக்குற்ற பெண்பாற் பெயர். முதல், மூலம் என்னும் பொருளுடையது. - - இதன் வழி, அனைத்து இயற்கை இயங்கியலுக்கும் மூல முதலாகி நிற்கும் ஓர் அறமுதல் பேராற்றல் உண்டென உணர்த்தினார்.

ஆதி வடதிரவிடச் சொல் என்பார் பாவாணர். தமிழ்ச் சொல்லே என்று நிறுவுவார் அருளியார். இது, தொடக்கப் பொருள் தரும் தூயதமிழ்ச்சொல் என்பது அவர் கூற்று. -பகவன் - பகுக்கக்கூடியவன் - பாகுபாட்டுக்குரியவன். ஆதி பகவன் - முதல் பகுநிலைக்குரியவன். அல்லது பாகுபாட்டு நிலைக்கு முற்பட்டவன்.

என்னை; உலகின் மூலமுதலினின்று. உயிர்கள் வேறு பிரிதற்கு முன் இருந்த இருப்பு நிலை என்க. அதனின்று வெளியேறிய உயிர்களைத் தனிப்படுத்திக் காட்ட ஆதி பகவன் என்றார். இதன்வழி முழு இறைமையின் ஒரு பகுதி உயிர்களாகி வெளியேறிய பின், மறுபகுதி இறைமையாக இருப்பதை உணர்த்தினார், என்க.

பகவன் என்பதும் வடதிரவிட (பிராகிருதச் சொல் என்றும், தொடக்கத்தில் இது கதிரவனை பகலவனைக் குறித்துப் பின்னர்க் கடவுளைக் குறித்தது, என்றும் கூறுவார் புலவர் மதிவாணனார். ஆதி பகவன் என்னும் தொடர்ச்சொல், சிவனியச் சார்பாக, 'உலகம் ஆதி ஆற்றலாகிய அம்மையைத் தன் ஒரு பாகத்திற் கொண்ட (ஆதி+பகவுtஅன்) முழுமுதற் கடவுளை (சிவனை)