பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்

55


55

அ - 1 -1 - அறமுதல் உணர்தல் - 1

முதலாக உடையது' என்று கூறியதாகக் கருதுவார்,

மறைமலையடிகளார். அவர் போல் பிறரும் பல்வேறு

கரணியங்கள் கூறி, இத் தொடர்ப் பொருளைத் தம்தம் சமயச் சார்பாக்கிக் காட்டுவர். -

உவமைக் கண் எழுத்தெல்லாம் என்று குறித்ததால் உலகு என்பதை 'உலகெல்லாம் என்றும் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு கொள்ளவே, உலகங்கள் எல்லாவற்றையும் தோற்றிய அத்தோற்றத்துக்கு முதலாக உடைய ஒருவனையே ஆதிபகவன் என்றார் என்றும் பொருள் கொள்ளல் வேண்டும். கொள்ளவே, குரு என்பார் கொள்கை தவிர்ந்தது என்க. . .

'குருவும் கடவுளாகக் கருதப்பெறுவர் என்பதைத் 'தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (268) என்பதில் கூறினாரேனும், ஆதிபகவன் என்பதில் முழுமுதல் இறைவனையே அவர் குறித்தாராதல் வேண்டும். இஃது, எந்தச் சமயத்தையும் சார்ந்ததாகப் பொருள் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், ஆதிபகவன் என்று இணைத்து வழங்கியிருப்பார் என்று கருத வேண்டியுள்ளது.

மற்று. இத் தொடருக்குப் பல மதவியலாரும் கூறும் கூற்றுகளும், அவற்றுக்கான மறுப்புகளும் இதன் நிறைவுரையில் மிக விரிவாகக் காட்டப்பெறும் முதற்றே உலகு - (ஆதி பகவனை முதலாக உடையது உலகு. - முதலது முதல் அது முதல் து முதற்று. ஏகாரம் உறுதி தேற்றப் பொருளில் வந்தது. - இங்கு, உலகை முன் வைத்துக் கூறியது, கருமியத்தை (காரியத்தை)க் கொண்டு, கரணியத்தை (காரணத்தை)ப் புலப்படுத்த வேண்டி என்க. என்னை? பாண்டியன் வென்ற நாடு’ என்பதில், பாண்டியன் முன்பே அறியப்

பெற்றவனாகலின் அவனை முன் வைத்தும், அறியப்படாத

செய்தியாகிய வென்ற நாட்டைப் பின்வைத்தும் கூறலே மரபு. இங்கு, இம் மரபை மாற்றி, இந்நாடு பாண்டியனை

வென்றியாக உடையது' என்பது போல், இவ்வுலகு

ஆதிபகவனை முதலாக உடையது என்று பொருள் வரும்படி

கூறியது, காணப்பெறும் கருமியப் பொருளாகிய உலகை

முற்காட்டி, இதற்கொரு காரணன் வேண்டு மன்றோ, அவன்