பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 56

ஆதிபகவன் என்று அளவையான் நிறுத்துதற்கே என்க. - உலகு - உலகம் - தூய தமிழ்ச் சொல். சுழலுதல் . சுழன்று கொண்டிருப்பது என்னும் பொருளுட்ையது. அல மரல் - உலமரல் - சுழலுதல். இதனை லோக என்னும் சமசுக்கிருதத்திலிருந்து வந்ததாகக் கூறுவது திரித்துக் கூறுவது. லோக் என்பது பார்க்கப் படுவது என்னும் பொருளது. உலகம் மட்டுமன்று பிற அனைத்துமே பார்க்கப்படுவதால் இப்பொருள் பொருத்தமற்றது என்க. - இனி, உலகம் என்னும் சொல் போலவே உலகைக் குறிக்கும் பிற சொற்களும் அறிவியற் பொருள் சான்றவை என்க. அவை:

ஞாலம் - தொங்கிக் கொண்டிருப்பது. (ஞாலுதல் தொங்குதல்) கோளம் - உருண்டையாய் இருப்பது மண்ணகம் - ஐம்பூதங்களும் பொருந்தியிருப்பது. மண்ணுதல் - பொருந்துதல் - இணைதல். வையகம் - சக்கரம் போல் உருண்டுகொண்டிருப்பது. வையம் - சக்கரம் - வண்டி - உருளுதல். நிலம் - உயிர்கள் நிலைத்திருப்பது. நில் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். புடவி - புடைத்திருப்பது. புடைந்து (விரிந்து கொண்டே செல்வது என்னும் பொருளில் பிரபஞ்சத்தையும் (Universe) குறிக்கும் பொருள் பொதிந்த சொல்.

3. அகர முதல எழுத்து எல்லாம் எழுத்துகள் எல்லாம் அகரத்தை

முதலாக உடையன. இந்நூலைக் கற்கப் புகுவான் எழுத்தையும் மொழியையும் கற்றவனாக இருத்தல் வேண்டும். ஆகையால், அதன்வழி அவனுக்கு அறிந்த உவமை கூறினார். அகரத்தை எடுத்துக் காட்டியது ஒலிவடிவாகிய மூலத்தைக் காட்ட என்க. எழுத்துகளைக் கூறியது பருவடிவாலான பொருளுலக விளக்கத்தை என்க. - எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதல். உலகுக்கெல்லாம் இறைவன் முதல். எல்லாம் என்பது இரண்டுக்கும் வந்து பொருள் தரும். எல்லா எழுத்துகளும் அகரத்தினின்றே தோன்றியது போலவே, எல்லா உயிர்களும் பிற பொருள்களும் இறைமையினின்றே தோன்றியமை பெறப்படும்.