பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ-1-1-அறமுதல் உணர்தல்

57


57

அ - 1 - அறமுதல் உணர்தல் - 1

உயிரெழுத்துகள் வரிசையில், நெடில்கள் தவிர்த்து எழுத்துகள் - அ, இ, உ, எ, ஐ, ஒ, ஒள ஆகிய ஏழும், ஃ-ஐயும் சேர்த்தால் எட்டும் ஆகும். இவற்றுள் 'அ' இறைவனையும், பிற ஏழும் ஏழு உயிர்ப்பிறவிகளையும் குறிக்கும். ஏழு உயிர்ப்பிறவிகளாவன: நிலைத்திணை, நீந்துவன, ஊர்வன, பறப்பன, நகர்வன (விலங்குகள்), நடப்பன மக்கள்), ஃ எழுத்து அனைத்துக்கும் பொதுவாகிய, கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரி (microbeகளைக் குறிக்கும், என்க. 'அ'கரம் முதலில் வாயைத் திறந்து கூறுகையில் ஒலியாக இருந்து, அதனை எழுதுகையில் ஒளி வடிவமும் பெறுவது போலவே, இறைவனும் முதலில் ஒலி வடிவாய் இருந்து, பின் உலகங்களும் பிறவுமாக இயங்குகையில் ஒளிவடிவாகவும் விளங்குகிறான் என்க. அகரத்தை இறைவனாகவும், பிற எழுத்துகள் அனைத்தையும் உயிர்களாகவும், உயிர்ப்பொருள்களாகவும் உயிரும் மெய்யும் சார்ந்த வாழ்வுயிர்களாகவும் உருவகம் செய்தார். இங்கு, உயிர்கள் என்றது அகரம் தவிர்த்த பிற உயிரெழுத்துகளையும், உயிர்ப் பொருள்கள் என்றது மெய்யெழுத்துகளையும், உயிரும் மெய்யும் சார்ந்த வாழ்வுயிர்கள் என்றது உயிர்மெய் எழுத்துகளையும் குறிக்கும் என்க. இதனால் இறைக் கொள்கையையும் உயிர்க் கொள்கையையும் ஒப்பினார் என்க. இதில், எழுத்துகள் என உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகியவற்றையும், உலக இயக்கத்தையும், இறைமையுடன் இணைவைத்துக் கூறியதால், தொல்காப்பியத்துள் கூறப்பெறும் இம்மூவகை எழுத்துகளின் இயக்க இலக்கணங்கள், உலகின் உயிரியக்கத்திற்கும் பொருந்தும் என்க.

உயிரெழுத்துகள் - உயிர்கள். மெய்யெழுத்துகள் - உடல்கள் - உடம்புகள். உயிர்மெய்யெழுத்துகள் - உயிரும் உடம்புமாய் இயங்கும் மக்கள். இனி, எழுத்திலக்கணத்தோடு, உயிர் இலக்கணம் பொருந்துமாறு காண்க: (சில எடுத்துக் காட்டுகள்)